பக்கம்:எப்போதும் இருப்பவர்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விரோதிகள், விபசாரிகள், திறமையில் இவனை ஜெயிக்க முடியாதவர்கள்-இவர்கள் எல்லாம் ஒயில்டைக் குற்றவாளி என்று நிச்சயப்படுத்தினார்கள். பிறகு நீதிபதியின் தீர்ப்பும், அதை நிச்சயப்படுத்தியது. இரண்டு வருஷம், சிறைவாசம் கிடைத்தது. சிறையிலே இவன், எதை எதையோ நினைத்துக் கண்ணீர் தெளித்துக் கொண்டே இருந்தான். உதை வாங்கினான். ஊசி ஏற்றப்பட்டான். முள் சட்டத்தில் உட்கார்ந்தான். 1500 நிமிஷங்கள் இருட்டறையில் பசியோடு தள்ளப்பட்டான். ஒரு தடவை விழுந்து காலு வலியையும் உண்டாக்கிக் கொண்டான்.

       சிறைவிட்டு சிறை மாற்றும் போது, கைதியின் கைகளோடு, ஒயில்டின் கைகளையும் சேர்த்து விலங்கு போட்டு முக்கியமான ஜங்ஷன்களில் நிற்க வைப்பார்கள்............இரண்டு வருஷங்களும், இவன் தண்டனையும் ஒரே சமயத்தில் முடிந்தது! ஊருக்கு வந்தான், மனைவி வரவேற்கவில்லை. விவாகப் பிரிவு' செய்து கொண்டாள். லண்டன் வந்தான். இவனைப் பார்த்ததும், நண்பர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டனர். பெண்கள் கண்களை மூடிக் கொண்டனர். சிறு பையன்கள் ஒடிப் போய் பெற்றோர்களின் மடியில் ஒட்டிக் கொண்டனர். இவன் போகும் தெருக்களில், அனேகம் கதவுகள் கிடீர் திடீர் என்று சாத்தப்பட்டன. ஒட்டலில் இருக்க இடம் கொடுக்கவில்லை. இப்படி மறுத்த லண்டனை விட்டுப் பாரிசுக்கு போனான். அடிக்கடி அழுதபடி அங்கே காலத்தைக் கழித்து வந்தான். இந்த 'ஒப்பாரி வாழ்க்கை'யில்கூட சட்டையை அடகு வைத்து வாத்தியக் கருவி வாங்கி, சங்கீதப் பழக்கம் செய்து கொண்டான்.
     

சிறை அதிகாரியின் கொடுமையால் ஏற்பட்ட காது வலி, இவனை 1909-ல் கொன்று விட்டது. கவிதையில் ஆரம்பமாகி, வசனத்தால் பலமடைந்து, சங்கீதத்தோடு இவன் வாழ்வு முடிந்துவிட்டது!

சுரதா

5