பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 4 எமிலி ஜோலா டத்திலே சகல நாடுகளும் திண்டாடின. இதன் காரண மாக ஒரு பயங்கரமான புரட்சியே வந்துவிடும்போல் இருந்தது. சமாதான விரும்பிகள், ஜனநாயகக் குடி யரசின் முன்னேற்றத்தில் கவலைகொண்டவர்கள் குலே நடுங்கிவிட்டனர். வரட்டும் யூதர்களே ஒரு கைபார்த்து விடுவதென்று குறுகிய மனத்தினர் கும்மாளமடிக் கின்றனர். இந்த நிலமையை இப்படியே வளரவிடுவது எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவதாகும். ஆகவே ஏதாகிலும் செயது திர வேண்டுமென்ற முடிவில் 1892-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 25-ந் தேதி பிரெஞ்சு நாட்டின் பிரதிநிதிகள் சபை கூடி விவாதித்தது. விவாதத்தின் ஒரு தலைப்போக்கைப் பார்த்து உபசபாநாயகர் (Deputy Speaker) மனம் உடைந்துவிட்டார். (அவர் ஒரு யூதர்) ஒரு முடிவில்லாமலே சபை கலேக்கப்பட்டுவிட்டது. இதைப் போன்ற கண் துடைப்பு வேலையைச் செய்து முடித்துவிட்டார்கள் என்று தெரிந்தவுடனே ஜோலா வுக்கு அடக்க முடியாத ஆத்திரம். நீதி மன்றத்தை மீண்டும் இந்த வழக்கில் பரிசீலனை செய்யும்படித் தூண்ட வேண்டும். இல்லையானுல் கிளர்ச்சி செய்யவேண்டும் என்ற முடிவில் ஒரு விறுவிறுப்பான கட்டுரையைத் திட்டினர். - - - எச்சரிக்கை 5-12-1897-ல் பிஃகாரோ (Bigalo) பத்திரிகையில் வெளியாகி இராணுவ நீதி மன்றத்தாரை நடுங்கச்செய்த கட்டுரை இந்த நீதி மன்றம் நீதியை வழங்கும் என்று எதிர் பார்க்கின்றேன். அது அப்படிச்செய்யத் தவறிவிட் டால் பிரஸ்தாப விஷயத்தில் நான் நேரடியாகக் கலந்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/15&oldid=759902" இலிருந்து மீள்விக்கப்பட்டது