பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 15 கொள்ள வேண்டிவரும் என்பதை எச்சரிக்கை செய் கின்றேன். - இந்தச் சாரமற்ற யூதஎதிர்ப்பு உணர்ச்சி நம்மை ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னலே தள்ளிவிடுகிறது. நாகரிக நாடு விரும்பத்தகாத ஒன்று, செல்வர்கள் மாளிகையிலே சேகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. விளையாட்டாக ஆரம்பிக்கப்பட்ட இந்த வீண் வேலை வேதனையாக முடியும் என்பதை அறியாத மூடர்களுக் காக நாடு கண்ணிர் சிந்தவேண்டிய நிலை ஏற்படப் போகிறது. மீண்டும் ஓர் மதப்போர் நடைபெற வேண் டுமா? இது மிக மிக மோசமான் எண்ணம். நாச வேலை. நல்லவர்கள் மனம் குழம்பும் நரக வேதனை. யாரோ ஒரு முட்டாளின் எண்ணத்தில்தான் இது உதித்திருக்க வேண்டும். சமத்துவமும், சகோதரத்துவமும், சுதந்திர மும் உள்ள இந்த நாட்டில் இத்தகு கேடான எண்ணம் வந்திருக்கக் கூட்ாது என்று நான் கண்டிக்கிறேன். சுதந் திரத் தந்தை ரூஸோவின் கல்லறை கவலைப்படுகிறது. எப்படியோ வரத்தகாத எண்ணம் வ்ந்துவிட்டது. இத்ை மேலும் வளரவிடக் கூடாது. நாட்டின்பால் நல்லெண் ணம் கொண்ட நல்லோர்களே ! இதற்கு ஆக்கம் அளிக் காதீர்கள். இந்தத் தொத்து.நோயைக் கொல்லுங்கள். ஏன்ென்ருல் இது பல கொடுமைகளைச் செய்து மக்களே. விஷக் கடலில் தள்ளியிருக்கிறது என்பதை நாம் மறுக் காமல் ஒப்புக்கொண்டே இரவேண்டும். டிரைபஸைத் தண்டித்ததின் மூலம் நாடு மன்னிக்க முடியாத மகாக் கொடிய குற்றத்தைச் செய்திருக்கிறது என்பதை நினைவுபடுத்துகிறேன். இந்த உதாரணமே, இந்த யூத எதிர்ப்பு எண்ணமே, பிரெஞ்சு நாட்டைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/16&oldid=759903" இலிருந்து மீள்விக்கப்பட்டது