பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 எமிலி ஜோலா கொண்டிருக்கின்றனர். அனேவருடைய கவனத்தையும். அநியாயத் தீர்பளித்த இராணுவ நீதி மன்றத்தின் மேல் திருப்பிவிடப்பட்டிருக்கிறது. உண்மையான குற்றவாளி. யார்? எஸ்டெரெஸியா, டிரைபஸா, இதைக் கண்டு பிடித்தாகவேண்டும். இந்தப் பொறுப்பு சர்க்காருக்கு வர வர நெருங்கிக் கொண்டிருக்கின்றது. நீர் பூத்த நெருப்புபோல் இருந்த இந்தச் செய்தி, சாம்பல் அகற். றப்பட்ட நெருப்பெனத் தெரிகிறது. ... " அவசர அவசரமாகக் கூடுகின்றனர். அதிகாரிகள் குசு குசுவென எதையோ பேசினர். ஏதோ ஒரு முடி வுக்கு வந்தவர்கள்போல் இருந்த இடத்தைக் காவி. செய்தனர். மேஜையின் மேலிருந்த பிராந்திப் புட்டிகள் காலியான பிறகு, ஜோலாவின் எழுத்துக்கள், கிளப்பி, விட்டிருக்கும் குருவுள் உண்மையான குற்றவாளியான' எஸ்டெரெஸியைக் கைது செய்து விசாரித்துத் தண்டிக் கும் வரை அடங்காது. அதற்காகவாவது எஸ்டெரெஸி. யைக் கைது செய்து விசாரிப்பதைப்போன்ற நாடகம் நடத்தித்திர வேண்டும். அப்படிச் செய்யாதவரை எமிலி ஜோலாவின் ஆவேச மிக்க எழுத்தால் ஒன்று திரளும் மனிதசக்தியை அடக்கிவிட முடியாது. அந்த நிலையையுண்டாக்கியிருக்கிறது பிகாரோ பத்திரிகை. பத்திரிகையின் மேல் ஆத்திரம், ஆல்ை சட்ட ரீதியாக ஒன்றும் செய்துவிட முடியாது. பத்திரிகைச் சுதந்திரம் அந்த அளவுக்கு மேலோங்கி இருந்தது. ஆகவே எஸ்ட்ெரெஸியை விசாரணை மண்டபத்தில் நிறுத்துவது: தவிர வேறு விழியில்லை. ஆகவே அவனக் கைது செய்ய உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்திரவின்படி எஸ்டரெஸியைக் கைது செய்துகொண்டு போகின்றனர். இதையறிந்த ஜோலா நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலிருந்தான். ஆணுல்:- -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/19&oldid=759906" இலிருந்து மீள்விக்கப்பட்டது