பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O எமிலி ஜோலா விசாரணை நாடகம் எஸ்டரெஸி நீதி மன்றத்துக்குக் கொண்டு போகப் படுகின்ருன். ஆம் இன்று எப்படியும் உண்மை வெளி வந்தே இரும். இனி தப்புவதற்கு வழியில்லை. இனி யாரும் காப்பாற்ற முன் வரமாட்டார்கள். அப்படி யாராகிலும் துணிந்து முன்னுக்கு வந்தாலும் அவர்கள் தலையும் சேர்ந்து பலியாகும். அவ்வளவு சிக்கலான வழக்கு. நாம் யாரைக் காட்டிக் கொடுக்க முடியும்? அப்படியே காட்டிக்கொடுத்துவிடுவோமானல் யூதி எதிர்ப்பு உணர்ச்சி பூண்டோடு அழிவது திண்ணம். ஆகவே அதைச் செய்யக்கூடாது. இப்படி எல்லாம் நினைத்துக் கொண்டு நீதிமன்றம் நோக்கி நடக்கின்ருன். விசாரணை ஆரம்பிக்கப்படுகின்றது. ஜூரர்களுக்கு அது வரை இருந்த சுரு சுருப்புக் காணப்படவில்லை, வழக் கறிஞர்கள் சரமாரியான கேள்விகளைக் கேட்கின்றனர். நீதிபதி அவர்களைத் தடுத்துச் சாமர்த்தியமாக நிறுத்திக் கொள்கின்ருர், அவனுக்கு எதிராகச் சாட்சிகள் வரும் போது உண்மை வெளியாய்விடுமோ என்று கலங்கு கின்ருன். ஆல்ை தான் இராணுவத்தில் பெற்றிருக்கும் அனுபவத்தால் பல முறை சமாளித்துக் கொண்டு உறுதி யாக நிற்கிருன். வேர்த்து உடலெல்லாம் நீராகக் கொட்டுகிறது. "ஏதோ இவனுக்கு உடல் நிலை சரியில்லே போல் இருக்கிறது. என்று நீதிபதி மழுப்பிவிடுகிருச் ஆமாம் என்று தலையாட்டித் தப்பித்துக் கொண்டு தன் தப்பை இந்த தந்திரத்துக்குள்ளே மறைத்துவிடு கின்ருன் இந்தச் சதிகாரன். ஜூரர்களும் ஜாடையாக இருந்துவிடுகின்றனர். இந்த நாடகம் சில மணிநேரம் நடக்கின்றது. வெளியே இதன் முடிவை அறிய ஆயிரக் கணக்கான மக்கள் கூடியிருக்கின்றனர். ஜோல்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/21&oldid=759908" இலிருந்து மீள்விக்கப்பட்டது