பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பி. சிற்றரசு 25 இளமையே! நமக்கென்ன என்று இருந்துவிடாதே. வருங்காலம் உன்னுடையது. வையகம் உன் பேராற் மலேக் கேட்கிறது. அதன் வழி முறைகளே நிர்ணயிக்க வேண்டியது நீ, பாசிபடிந்திருக்கும் பிரெஞ்சு நாடென் .ணும் தடாகத்தில் உன் உணர்ச்சி என்ற கல்லே வீசு. பாசி விலகும். மீண்டும் அது ஒன்று சேராமுன்னம் அதற் கடியில் இருப்பது பளிங்கு நீரா, பல நோய்களுக்குக் காரணமாகும் விஷக் கிருமிகள் நிறைந்த நீரா என்பதைத் தெரிந்துகொள். - - சுடர்விட்டெரிந்த உன், தாயகம் இன்று சோம்பிக் .கிடப்பதை எண்ணி நீயும் சோம்பிக் கிடக்காதே. வருங் காலந்தான் நீ, நாட்டை வாழ வைக்க வேண்டியதும் நீதான். நிதானம் இழந்திருக்கும் நீசர்களின் வலையில் அகப்பட்டுத் திண்டாடும் நீதிக்கு வழிகாட்ட வேண்டி யது நீ. துன்மார்க்கனுக்குச் சன்மானமும், சன்மார்க்க லுக்குத் துன்மார்க்கத்தனமான தூக்குத் தண்டனையும் அளிப்பது நாட்டுக்கு ஒரு பொழுதும் நன்மை பயக் காது. நாட்டிலுள்ள நல்லோர்கள் மனம் குளிர, நீ உனது இளமைய்ை ஈடாக்க வேண்டும். இளமை இன்பம் அனுபவிப்பதற்கு மட்டிலுந்தான் என்றிராதே. அது ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலுந்தான். அதுவும் உன் சுயநலம் என்றுதான் இவ்வையகம் பேசும். நாட்டின் துர்ப்பாக்கிய நலிவை நசுக்கத் தூக்கிலே, மாண்ட தூய நெஞ்சினரை நின்த்து, அவர்களுடைய அடிச்சுவட்டைப் பின்பற்ற ஆவேசமாய் எழு. நீ அதைச் செய்ய எண்ணில்ை உனக்குச் சன்மானம் கிடைக்கும் என்றெண்ணுதே. பல பக்கங்களிலிருந்து கண்டனக்கண்கள் உன்னேச்சுற்றிலும் தாக்கும். செல்வர் களின் சீற்றம், பிரபுக்களின் பயங்கரம் உன்னேவிடாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/26&oldid=759913" இலிருந்து மீள்விக்கப்பட்டது