பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 27. குன்ரு இளமையே கோபுரம்போல் உயர்ந்திருந்த உன் மணித்திரு நாட்டை மண்மேடாக்கச் சில மடையர் கள் தயாராய் விட்டார்கள். அதன் மரண நாடிகள் அசைவற்றுப் போகாமுன்னம் நீ உனது மரண மூச்சை அதற்குத் தானம் செய்ய வேண்டும். இன்றேல் அது அழிவது திண்ணம். - வாழ்ந்து வாழ்ந்து சலித்துப் போன வயோதிகர்களே நம்பாதே. அவர்கள் செய்த குற்றத்தால் வந்தவின தான் இது. எதற்கும் யோசிக்கும் நிதான சிந்தை யுடையவர்கள். இதில் யோசிப்பதற்கொன்றுமில்லை. பூத, பெளதிக, விஞ்ஞான தர்க்க ரீதியான விஷயங்களல்ல, சில விஷமிகளால் இடப்பட்ட வேதனே வேலியைத் தாண்டிச் செல்ல வேண்டும். காலம் கடத்துதல் சில வற்றில் அபாயமாக முடியும். காலம் கடவாததும் சிலவற்றில் அபாயமாக முடியக்கூடும். பிரஸ்தாப விஷயம் முந்தியதைச் சேர்ந்தது. ஆகவே யாருக்கும் அஞ்சாத இளமையே! எழு, எழு, பழிக்கஞ்சாது சில பாவிகள் செய்யும் பயங்கரச் செயல்களால் நாட்டின் தலைமேல் நாளுக்கு நாள் பாவத்தின் பாரம் அதிகமாய்க் கொண்டிருக்கின்றது. அதைக் கீழே இறக்கும் ஆற்றல், தைரியம், அக்கரை, ஆர்வம், கடமை எல்லாம் உனக்கே உண்டு. இந்த நாடு அழிந்த பின் நீ எங்கே வாழ்த் திட்ட மிட்டிருக்கின்ருய்? வேற்று நாட்டில் நீ அடிமை. இங்கே சுதந்திர மனிதன் சுதந்திரமாக இருக்க எண்ணமா? அடிமையாக இருக்க ஆசையா? எது உன் முடிவு ? முன்னேயதானுல் முன்னுக்கு வா. எந்த லாபத் தையும் கருதாமல் முன்னே வா. நாடு வேறு, நீ வேறு என்ற வேறுபாடில்லாமல் வெளியே வா. இளமையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/28&oldid=759915" இலிருந்து மீள்விக்கப்பட்டது