பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பி. சிற்றரசு 29, அவர்கள் இவனே வழக்கறிஞரைப்போல் எண்ணினர். இவன் அவர்கள் பக்கம் வாதாட வலியவே முன்வந். தான். எந்தவிதமான கைம்மாறும் கருதாது முன் வந்தான். சரி, நீங்கள் போகலாம், என்று வந்தவர்களுக்கு விடைதந்தனுப்பிவிட்டு ஆவேசமாக எழுதுகின்றன். ஓர் இரவு, இரண்டு இரவுகள், மூன்று இரவுகள் முடிய வில்லை. அவன் சிந்தனையிலிருந்து டிரைபஸைக் காப். பாற்ற வேண்டியதற்கான உண்மைகள் மலேயுச்சியி லிருந்து அடிவாரம் நோக்கி ஓடிவரும் நீர் அருவிகள் போல் ஓடிவந்து தாளில் கொட்டுகின்றன. உணவு, உண்டோமா இல்லையா என்ற நினைவே இல்லாமல் எழுதுகின்ருன். மேஜையின்மேல் குடிக்கத் தேநீர், குளிக்கவைத்த நீர், சாப்பாட்டு அறையில் பரிமாறப்பட் டிருக்கும் உணவு, அவ்வளவும் அப்படியே இருக்க எழுதிக்கொண்டிருக்கின்ருன். உலக வரலாற்றிலேயே மிகக் கொடுமையாகத் தண்டிக்கப்பட்டவன் அவன் தான் என்று பிரெஞ்சு நாட்டுப் பேரிலக்கிய ஆசிரியர் அனதோல் பிரான்சு ஒருபக்கம் வருந்துகிருர். ஜோலா மீண்டும் எழுந்து இங்குமங்கும் திரிந்து, கொண்டு தன் கைகளைப் பிசைந்துகொண்டு வெறித்த பார்வையுடன், அநீதிக்கு இட்மளிக்க முடியாது என்று. மீண்டும் ம்ேஜையிலமர்ந்து, பூே ன வை எடுத்தான். பிரான்சு முழுதும் டிரைபஸை வெறுக்கிறது. ஆம். அவ. குறுக்காகப் பரிந்து பேசுபவரையும் பகைக்கும். இலக்கிய மன்றம் இடித்துரைக்கும். ஆமாம். ஆனால், அநீதிக் குச் சக்தி அதிகம் இருக்கிறது என்பதற்காக அதன் போக்கில் விட்டுவிடுவதா? அதற்கு அடிபணிவதா ? அதற்காக இந்த அறிவு, ஆற்றல், விளக்கத்தைத்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/30&oldid=759918" இலிருந்து மீள்விக்கப்பட்டது