பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 எமிலி ஜோலா துண்டின்ை ? குறிப்புத் தாள்களேயும், ஆதாரக் கடிதங் களையும் ஒன்றுசேர்த்தான். களத்திலே புகும் வீரனைன் எழுதினுன், எழுதினன், இரவு பகலாக எழுதினன் மேஜை எல்லாம் தாள்கள். ஆவேசம் கொண்டவன் போல் ஜோலா காணப்பட்டான். நீதி தயாராகிவிட்டது அரோரி பத்திரிகைக் கூடத்துக்கு நண்பர்களே வரச்சொல்லிவிட்டு, ஜோலா கிளம்பினுன் அவர்களைக் கான, பரட்டைத் தலையுடன், கசங்கிய உடையில் வேகமாகக் கடைவீதியில் ஜோலா சென்றபொழுது கோச்சு வண்டியில் இருந்த நீதிபதிக்கு ஜோலாவின் வேகம் கலக்கத்தை உண்டாக்கிவிட்டது. விலேகூறிக் கொண்டிருந்த கடைக்காரன் ஜோலாவையே பார்த் தான், சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தவர்கள ஜோலாவைக் கண்டதும் வாயற்படியில் வந்து நின்றனர். பத்திரிகைக் கூடத்தில் நுழையும்பொழுது அவளுல் அழைக்கப்பட்ட அனைவரும் காத்திருந்தனர். எரிமலை வெடிக்கப்போகிறதா - டிரைபஸினுடைய மனவியின் கண்கள் நம்பிக்கையால் ஒளிவிட்டன. வழக்கறிஞர் லபோரிக்கு ஒவ்வொரு விடிையும் ஒரு யுகம்போல் தோன்றியது. அனதோல் பிரெஞ்சுக்கு உட்கார முடிய. வில்லை. எல்லாருக்கும் வணக்க ஞ் செலுத்திவிட்டு ஜோலா தன் கையெழுத்துப் பிரதியைப் புரட்டின்ை. தலைவருக்கு புகழ்பெற்ற பிரெஞ்சுத் தாயகத்தின் தனிப்பெருந் தலைவரே டிரைபஸ் வழக்கு பிரெஞ்சு நீதியின்மீது அழி யாத களங்கத்தை யுண்டாக்கி இருக்கிறது. அதை நீங் கள் துண்டத்துத் தீரவேண்டும். உங்கள் ஆட்சி மிக மேன்மையானது. இதுவரை இருந்த தலைவர்களுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/31&oldid=759919" இலிருந்து மீள்விக்கப்பட்டது