பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 எமிலி ஜோலா பெருமைக்குரிய இராணுவத் தலைவன் டிரைபஸ், ஜெர்மன் பட்டாளங்களே முறியடித்துக்கொண்டு ரண களத்தில் தன் ரத்தத்தைச் சிந்திக்கொண்டிருந்தபோது. திடீரென ஒருநாள் அந்த மாவீரன் டிரைபசின் வீட் டைச் சோதனையிட்டவனும் இந்தப் பட்டிதான் என் பதைத் தாங்கள் குறித்துக்கொள்ள வேண்டும். தன் சுயநலத்துக்காகவும், தான் சார்ந்திருக்கும் யூத எதிர்ப்பு இயக்கம் ஐடன்னத நிலையை அடையவேண் டும் என்ற குறிக்கோளுக்காகவும் இவ்வளவு பழிகளே, யும் டிரைபசின் தலைமேல் சுமத்தி அவனத் தீவுக்கு அனுப்பிவிட்டுத் தானும் தப்பித்துக்கொண்டான். இதை நினைக்கவே வெட்கப்படுகின்றேன். வேதனை என் உள். ளத்தை வேல்போல் குத்துகிறது. நாட்டுக்கு ஏற்பட்ட, இந்தப் பெருங்கேட்டை நினைக்க நினைக்க நாணித் தலைப் குனிகிறேன். அடுத்தது அந்தக் கொலேகார எஸ்டரெஸி என் பவனைப்பற்றி ஆராய்வோம். டிரைபஸ் தந்தி கொடுத்த தாகத் தந்தி கொடுத்தவன் அவன்தான். வெட்கம் இல்லாமல் இவனும் ஒரு இராணுவ உயர்தர உத்தி யோகஸ்தனுக இருக்கின்ருனே என்பதற்காக வேதனைப் படுகின்றேன். இவன்தான் உண்மையான குற்றவாளி, என்பதற்கான பல ஆதாரங்களோடு டிரைபஸின் சகோ, தரன் மேத்யூ டிரைபஸ் முன்வந்திருக்கின்றன். அவன் கொண்டுவந்திருக்கும் ரிக்கார்டுகளைப் பார்க்கும்போது 2ண்மையான குற்றவாளி எஸ்ட்ரெஸி என்பவன்தான் என்பதற்குச் சிறிதும் ஐயமில்லை. ஆனல் பொய்யனுக் காக ஒரு போலி விசாரணை நடத்தி அந்தப் புரட்டனுக் குப் புனித முத்திரையிட்டு வெளியே அனுப்பிவிட்டார் கள் இராணுவ நீதி மன்றத்தார். ஆகவே மேத்யூ டிரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/35&oldid=759923" இலிருந்து மீள்விக்கப்பட்டது