பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 35 பஸ் புணர். விசாரணையை விரும்புகின்றன். அதற்குத் தங்கள் அனுமதியை வேண்டுகின்றன். அண்ணனே மீண் டும் காணவேண்டுமென்ற அவாவால் இந்த மண்ணின் தலைவராகிய தங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்ளு கின்ருன். - நான் டிரைபளயின் உயிரைக் கேட்கவில்லை. யாரு டைய அபிமானமும் எனக்குக் கிடைக்கவேண்டுமென்று விரும்பவில்லே. நீதி கிடைக்கவேண்டுமென்று என் உயி ரின் ஆனேயாகத் தங்களை மன்ருடிக் கேட்டுக்கொள்ளு கின்றேன். . குற்றவாளிக்குப் பதில் நிரபராதி தண்டிக்கப்படுவதை நான் ஒருநாளும் ஒப்புக்கொள்ள மாட்டேன். என் போன்ருர் இதை அனுமதிக்கவுமாட்டார்கள். அதுவும் தாங்கள் தலைவராக இருக்கும் இந்தச் சமயத்தில் மாத் திரம்ல்ல, பூகோள் அமைப்பில் பிரான்சு நாட்டின் எல் லேக் கோடுகள் இருக்கும் வரையிலுமாத்திரமல்ல, உல கம் உள்ளளவும். இந்த அநீதி நடைபெறக்கூடாது. இதையெல்லாம் சிந்திக்காமல், தக்க ஆதாரங் களேத் தருவித்துப் பார்க்காமல், தங்களுக்கு இருக்கும் செல்வாக்கால் ஒரு நிரபராதியின்மேல் குற்றம் சுமத்தி, பிரான்சின் மேன்மைக்காகச் செந்நீர் சிந்தியவன் இன்று டெவில்ஸ் திவிலே கண்ணிர் சிந்த, கைகொட்டிச் சிரித் துக்கொண்டிருக்கும் துரோகிகள்மேல் நான் குற்றஞ் சுமத்துகிறேன். - நான் குற்றஞ் சுமத்துகிறேன் ( case) ஜெனரல் ஜோன்ஸ் என்பவன்மேல் குற்றஞ்சுமத்து கிறேன். உண்மை குற்றவாளியான எஸ்டரெஸியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/36&oldid=759924" இலிருந்து மீள்விக்கப்பட்டது