பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எமிலி ஜோலா (இரண்டாம் பாகம்) தீவில் கடலின் மத்தியிலே கற்பாறை ஒன்றின்மேல் கந்தலாடையோடு, சாயும் தலைக்குத் தன்கைகளே முட்டுக்கொடுத்துக்கொண்டு கண்ணிர் சிந்திய வண்ணம் இருக்கின்ருன் டிரைபஸ். கண்ணுக்கெட்டிய தூரம் கடல். அதன்மேல் ஆனந்தமாக ஆரோகணித்துச் செல்லும் அலேகள். அவன் கருத்திலும் சோக அலே' கள். ஏன் ? அவன் கண்களிலும் கண்னர் அலேகள். ஹோ வென்று காற்றின் ஒசை. ஒரு பெரு மூச்சு. ' கொடுமை, அநியாயமான பழி, அவமானப் படுத்தப் பட்டேன். அருமை மனேவி அலைகடலுக்கப்பால். இந்த அபாக்கியன் கடலின் நடுவே ஒரு பயங்கரமான தீவில். அன்று அயலாரோடு அஞ்சாது போரிட்ட அசகாயகுரன் இன்று அந்தகாரம் சூழ்ந்த ஒர் தீவில். துள்ளிய எதிரிகளை வேட்டையாடி நாட்டைக் காத்த வீரன் இன்று 'தன்னெதிரே துள்ளிக்கொண்டிருக்கும். மீன்களிடம் தன் சோகக் கதையைச் சொல்ல வாயெடுக் கின்ருன். சொல்லுமா அவைகள் பதில் ? மெளனம் சாதிக்கின்றன. நான் குற்றவாளியா ? நள்ளிரவே நீயே கூறு.” கண் மூடிக்கிடக்கின்றது அந்தக் கருப்பு நிறக் காலம். " நான் குற்றஞ் செய்தேன ? நட்சத்திரங் களே ! நீங்களே கூறுங்கள். உதிரும் நட்சத்திரங்கள், உண்மையைச் சொல்ல வாயெடுக்க வில்லை. கண்களைச் சிமிட்டிமன்றகின்றன. இவனப் பரிகாசம் செய்வதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/4&oldid=759928" இலிருந்து மீள்விக்கப்பட்டது