பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 எமிலி ஜோலா அச்சகத்திலிருந்து திரும்புகிருன் ஜோலா. கற்கள் பறக்கின்றன. ஒரு பக்கம் கொடும்பரவி கட்டி இழுக் கின்ருர்கள். மற்ருெரு பக்கம் ஜோலா வீழ்க எனக் கூவுகின்றனர். டிரைபஸ் ஒழிக’ என்கின்றது மற்ருேர் கூட்டம். அவனுடைய வண்டிக்குள் கற்கள் வீசப் பட்டன. செலானே தடுக்கிருன். அவனும் படுகாயப் படுத்தப்பட்டான். இரத்தக் காயத்துடன் வீட்டிற்குள் நுழைந்தான் ஜோலா, திச்சயம் நீதி கிடைத்தே வேண்டும் என்ற அசையாத நம்பிக்கையால். ஜோலா கைது வீட்டில்' தயாராகக் காத்துக்கொண்டிருந்த போலீஸ், ஜோலாவைக் கைதியாக்கியது. சில நாட்கள் சிறைச்சாலேயிலே வைக்கப்பட்டான். அந்த நேரத்தில் தான் நாட்டுக்கு ஒரு கடிதம் எழுதி அதை அரோரி பத்திரிகையில் வெளியிட்டான். - நாட்டுக்குக் கடிதம். 6–1–1898 (A Letter to France) ஒ என் தாயகமே பெருமை மிக்க பி .ெ ர ஞ் சு நாடே! உனக்கு நான் விடுக்கும் இந்தப் பகிரங்கச் சவாலுக்கு நான் ஒருவனே பொறுப்பாளி, உன்னிடம் குற்றம் ஏற்படுகிறபோது அதை எடுத்துச் சொல்வதால் நீ வெட்கத்தால் தலைகுனியக்கூடாது. குற்றத்தைக் களேந்து குணத்தைக் காப்பாற்ற நீ தைரியமாக முன்வர வேண்டும். நீ அப்படிச் செய்யாமல், இதைப்பற்றி எடுத்துச் சொல்லும் என்னக் கோபிப்பதினலோ, அல்லது யாரோ ஒரு ஏழை சொல்லுகிருன் என்று அலட்சியமாக இருந்து விடுவதினலோ நீ உன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/41&oldid=759930" இலிருந்து மீள்விக்கப்பட்டது