பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 47 நியாயத்தின் சேய்களே! நேர்மையின் பிரதிநிதி களே ! தாய் நாட்டைக் காப்பாற்றத் தயை தாட்சண் ணிையமில்லாமல் துலாக் கோலேக் கையிலேந்தி நிற்கும் தூய எண்ணத்தின் தூதுவர்களே ! டிரைபஸ் குற்றமுடை யவனு என்பதை நீங்களே சொல்லுங்கள். பைத்தியக் காரப் பத்திரிகைகளின் பொய்ச் செய்திகாேப் படித்துச் சொல்லாதிர்கள். உங்கள் பகுத்தறிவைக் கேட்டுச் சொல்லுங்கள், நெருக்கடியான நேரத்தில் நிதானத்தை இழந்துவிடாதீர்கள். என்னுடைய நாற்பதாண்டு உழைப்பு, இதுவரை அநீதியைத் திண்டாத பேளு, என்னுடைய உண்மை யான கருத்துக்களுக்கு அஞ்சாத் மகுடமிட்டு வெளி வந்த அரோரி, பிகாரோ பத்திரிகைகள், அந்த வெளி யீட்டுக்காக வெளியே காத்துக்கொண்டிருந்த ஆயிரக்' கணக்கான மக்கள் அனைவருடைய ஆணேயாகச் சொல் லுகிறேன். டிரைபஸ் குற்றமற்றவன். . . . நீதிமான்களே இறந்த கால நிகழ்ச்சிகளே எண் ணிப் பூரிப்படையாமல், நிகழ்கால என் பிறப்பிடத்தின். தவருண போக்கை நினைத்து நெஞ்சுருகி நீர் மல்கி எதிர் காலத்தின் அபாயத்தைத் தடுக்க நீங்கள் அனைவரும் முன் வந்தால் நான் மிக மிக நன்றியுள்ளவனு யிருப்பேன். - . . . . . . . . . . அல்லது நீங்கள் ஏதாவதொரு சுட்டிக் காட்ட முடியாத கார்ணத்தால் பயந்துவிடுவீர்களானல், நாட் டின் பரிபாலனத்தை உயிர்கொடுத்தாயினும் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணுவதுதான் ஒரு உண்மையான குடியரசுவாதியின் கடமை என்று எண்ணுத பங்காளி கள் என்று முடிவுகட்டி அதற்காகப் பரிதாபப்படுவேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/48&oldid=759937" இலிருந்து மீள்விக்கப்பட்டது