பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 எமிலி,ஜோலா எண்ணி வெட்கப்படுகின்றன். காற்றே! நீயே கூறு. நான் கடமை தவறியவன ? ஜோலாவின் முதல் எழுத்தான ஜோ' என்று சொல்லுவது போல அடிக் கிறது காற்றும். ஜோல்ா என்பவன் ஒருவன் இருக்கின் ருன் நமக்காகப் போராட என்று டிரைபசுக்கு அங்கே எப்படித் தெரியமுடியும்? ' கடலலைகளே ! நீங்களே கழறுங்கள். நான் நாட்டைக் காட்டிக் கொடுத்த வணு ?' ஒன்றும் தெரியாது என்று சொல்லுவதைப் போல ஒன்றையொன்று நெட்டித் தள்ளிக்கொண்டு ஓடி விடுகின்றன அலகளும். வானகமே! நின்னேயே வேண்டுகின்றேன். வையகமே ! உன்னேயே கெஞ்சு கின்றேன். நான் உண்மையான குற்றவாளியாக இருந் 'தால் என்னைக் கொன்றுவிடுங்கள். ஆனல் இதைப் 'போன்ற வஞ்சனே செய்யாதீர்கள், வதைக்கப்படுகின் றேன். ஊரார் பரிகசிக்க ஏன் நான் உயிர் வாழ வேண்டும்? யாருக்காக, எந்த சுகத்துக்காக, எத்தகைய பெருமைக் காக, இனி நான் உயிர் வாழவேண்டும்? மானமழிக்கப் பட்டேன். சராசரி மனித எண்ணிக்கையிலிருந்தே இந்த மாகடலில் தள்ளப்பட்டு விட்டேன். நான் செய்த குற்றமென்ன ? குற்றஞ் செய்யாத எனக்கா இக்கதி ? என் பெருமைக்குரிய பிரெஞ்சு தாயகத்தின் உயிரையே என் உயிரென மதித்த எனக்கா இக்கதி?’ ஏக்கமான பார்வை ; சோர்வுற்ற நிலை, சுழலும் கண்கள். சுற்றும் தலே. தரணி புகழ் வாழ்ந்தவன் இன்று தகாத தீர்ப்பால் துரும்பென அலமோதுகிருன். எதிரிகளின் பீரங்கிச், சத்தத்துக்கு அஞ்சாத காளே, தன்மேல் சுமத்தப்பட்ட அபாண்ட பழிக்குக் குலே நடுங்கி விட்டான். எந்த இடரையும் மதிக்க்ாது எதிரிகளிடம் போரிட்ட வீரன் இன்று தன் இருதயம் இரண்டாயிரம் துண்டுகளாவதை எண்ணி எண்ணித் தேம்புகிருன். நீதியின் காலடியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/5&oldid=759939" இலிருந்து மீள்விக்கப்பட்டது