பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு, 53. ஆகவே முதல் குற்றத்தையே தலையிலடித்துவிடவேண் டும். என்னத் தண்டிக்கலாம். ஆனல் நீதியைத் தேடுங் கள். அது ஒன்றே வரலாற்றில் உயர்வடையும் தன்மை யுடையது. அந்த ஒரு பேருதவிக்காக என் உயிரை வேண்டுமானலும், மங்காத கீர்த்திபெற்ற என் தாயக மாம் பிரெஞ்சு பூமிக்கே காணிக்கையாகத் தயங்காமல் தருகின்றேன். எப்படியும் நீதி வெளிச்சத்திற்கு வர வேண்டும். இருள் போன்ற இருதயம் கொண்ட ஈனர் கள் ஒழிய வேண்டும். அறத்தாலான மாசற்ற கரங் களால் நாட்டின் களங்கம் துடைக்கப்பட வேண்டும், தூய எண்ணத்தின் தூதுவர்களே துணிந்து முன் வாருங்கள். நீதி நிரந்தரமான இடம் பெருத நிழல் அல்ல. நிச்சியம் அது கிடைத்தேதீருமென்று சொல் விக்கொண்டு என் விண்ணப்பத்தை இதோடு முடிக்கின்றேன். தீர்ப்பு ஜரர்கள் அனைவரும் உள்ளே சென்ருர்கள், ஏதோ கலந்து பேசுகின்றவர்கள்போல. நீதிபதியும் உள்ளே சென்ருர். சிறிது நேரத்துக்குப் பின்பு அனைவரும் வெளியே வந்து அவரவர்கள் இடங்களில் அமர்ந்தார் கள் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர்கள்போல. ஏற் கெனவே முடிவு க்கு வந்த விஷயத்துக்கு ஒரு புது மெருகைக் கொடுத்துவிட்டு கனத்துக்கொண்டே தீர்ப் பைப் படிக்கின்ருர் நீதிபதி. - - -- * " இதுவரை ஜோலா சொல்லியவற்றிற்கும், அவருக் காக வாதாடிய வழக்கறிஞர் லபோரி சொல்லியவற்றிற் கும் பிரஸ்தாப வழக்குக்கும் எவ்விதத் தொடர்புமில்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/54&oldid=759944" இலிருந்து மீள்விக்கப்பட்டது