பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. ബിജ ஜோலா ஜோலாவைக் கைது செய்யும்படி சர்க்கார் உத்திர விட்டது, டிரைபஸ் சம்மந்தமாக அரோரிப்பத்திரிக்கை விலும், பிகாரோ பத்திரிக்கையிலும் கட்டுரைகள் எழுதி: குர் என்பதற்காகவுமல்ல. அவரால் வெளியிடப்பட்ட கட்டுரைகளின் மூலம் அவர் குற்றவாளி அல்ல என் பதை. குடியரசு சட்டப்படி அவருக்களித்திருக்கும் எழுத்துச் சுதந்திரம் ஊர்ஜிதப்படுத்துகிறது. ஆல்ை ஒரு பலம் பொருந்திய இரானுவ நிதி மன்றம் இர ஆலோசித்துக் கொடுத்த இர்ப்பை எதிர்த்து எழுதுவதென்பது யாருக்கும் அளிக்கப்படாத உரிமை. மேலும் ஜோலா தன் வழக்கைப்பற்றிக் குறிப்பிடும். போது டிரைபஸ் விஷயமாகச் சில் ரிக்கார்டுகள் இருப்ட் தாகச் சொன்னர். மேற்படி ஆதாரங்களுக்கும், ஜோலா கைது செய்யப்பட்டு இன்று விசாரிக்கப்படும் இந்த வழக்குக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. ஒரு தீர்ப்பைத் தகாதென நிரூபிக்க முன் வந்த ஜோலா நியாயமானப் பாதையைவிட்டு விலகி மக்கள் மனதை மாற்றிப் பெருங் கிளர்ச்சிக்கு இடமளித்துவிட்டார் என்பதுதான் இந்த வழக்கின் தலைப்பு. இதனுல் நாட்டில் ஏற்பட்ட அமைதி பங்கத்திற்கு ஜோலா தான் நேரடியான பொறுப்பாளி என்று சர்க்கார் அவர்மேல் வழக்குத்தொடுத்தது. மேலும் இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துப் பேசுவதென்பது வெறும் சாதாரணமான உள்நாட்டு. விஷயம் மாத்திரமல்ல என்பதையும் ஜோலா உணர. வேண்டும். இராணுவ நீதிமன்றத்தார் தவறு இழைத்து விட்டதாக கருதி அந்தத் தவறு வெளிநாடுகளுக்குத் தெரிந்தால் புகழ்பெற்ற பிரெஞ்சு நாட்டின் கெளரவம் கெட்டுவிடும் என்று நினைக்க எப்படி ஜோலாவுக்கு உரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/55&oldid=759945" இலிருந்து மீள்விக்கப்பட்டது