பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 எமிலி ஜோலா கிறது. காருண்ணியம் இருக்கவேண்டிய இடத்தில் - கற்பாறை இருக்கிறது. - ஆயிரம் பிராங்குகளே லஞ்சமாக வாங்கிக்கொண்டுத் தன் மதிப்புக்குரிய தலைவன் டிரைபளை குற்றவாளி என்று கூசாமல் கூறிவிட்டான் எஸ்டரெஸி, டிரை பளயின் முகத்தையே கூட பார்க்காமல், அவனுடைய வாரிசுகளிடம் ஒரு காசும் வாங்காமல் அவன் குற்ற மற்றவன் உன்று பயப்படாமல் சொன்னுன் ஜோலா. எஸ்டரெஸி இருட்டில் சொன்னன். கயவாளிகள் கூட்டத்தில் கள்ளர்கள் மத்தியிலே சொன்னன். யார் பார்த்துவிடுவார்களோ என்று பயந்து பயந்து சொன் ன்ை. ஜோலா வெளிச்சத்தில் சொன்னுன். வரி வரி யாகக் கனல் பறக்கச் சொன்னன். பாரிஸ் அறிய, பிரான்சு நாடு அறிய, பார்முழுதும் அறிய, கோட்டைச் சுவர்மேல் ஏறிக் கோஷமிட்டுச் சொன்னன். குள்ளமதி யினர் உள்ளம் நடுங்கச் சொன்னன். யாருக்கும் அஞ் சாது, எவர் தயவையும் நாடrது சொன்னன். வீணர்கள் வெட்கித் தலைகுனிய வேங்கைபோல் பாய்ந்தான். அத்தகு மேதை, எழுத்தின் தந்தை, கருத்தின் எரிமலை இன்று பாரிஸ் நகர இருளடர்ந்த சிறைச்சாலை யிலே. சூழ்ச்சியே உருவெடுத்த எஸ்டரெஸி இராணுவ உடையிலே இன்னும் உயிரோடு நாட்டிலே நடமாடிக்" கொண்டிருக்கின்றன். காலத்துக்கு வாயிருந்தால் கசடர் களுக்கு நற்புத்தி புகட்டியிருக்கும். நீதிக்குக் கண்கள் இருந்தால் அந்த நீசர்களுக்கு நேர் வழியைக் காட்டி யிருக்கும். நேர்மைக்கு அறிவிருந்தால் டிரைபஸின் உரிமையை நிலைநாட்டியிருக்கும். இவ்வளவும் யூத எதிர்ப்பு இயக்கத்தின் காலடியில் சரணடைந்துவிட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/57&oldid=759947" இலிருந்து மீள்விக்கப்பட்டது