பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு டது. காலமே நீவாழி வாழி என்கின்றனர் கசடர்கள். காலமே! நீ ஒழிக ஒழிக. என்கின்றனர் கருணவான்கள். தண்ணிருக்குள் ஊதப்பட்ட காற்று கண்டிப்பாக நீர்க்குமிழியாக நீர் மட்டத்தில் வந்தேதீரும். எப்படியும் நீதியின் சாயலே நாட்டின் பக்கம் திருப்பிவிட்டிருக் கிருேம். கண்டிப்பாக உண்மை வெளிவந்தே திரும், என்ற முடிவோடு கையில் விலங்கிடப்பட்ட் கருனேக் கடல் ஜோலா காராக்கிரகத்தில் நுழைந்துவிட்டான். இராணுவ முகாமிலே வெற்றிக் கொண்ட்ாட்டம். எதிரியின் ஈட்டிமுனைக்குக்கூட பலமுறைத் தப்பியிருக் கின்ருேம். எனினும் ஜோலாவின் எழுத்து ஈட்டி யிலிருந்து தப்பவே முடியவில்லை. அப்பா ! ஒழிந்தான் ஜோலா. இனி யாரும் நமக்குப் பகைவர்களாகத்தோன்ற முடியாது என்று எக்காளமிடுகின்றனர் எஸ்டரெஸியும் அவனுடைய நண்பர்களும். யூத எதிர்ப்பு இயக்கச் சங் கக்கட்டிடத்திலே புதுக்கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கின்றது. தோழர்களுக்கெல்லாம் தேநீர் விருந்தளிக்கப்படுகின்றது. இந்தக் கொண்டாட்டம் யூத ஒழிப்புக்காக மட்டிலுமல்ல, ஜோலா சிறை சென்ற தற்கும் சேர்த்து. அந்த மாவீரன் வெளியே இருந்தபோது ஊமை களைப் போல். மெளனம் சாதித்தவர்கள் இன்று நரிகள் போல் ஊளையிடுகின்றனர். விருந்துண்ட போதையில் வெறியர்கள் வெளியே கிளம்பிவிட்டார்கள். போக்கிரி கள் கூட்டம் ஒன்று அரோரி பத்திரிகை கூடத்தை நோக்கி ஓடுகிறது. அதன் மேல் கற்கள் வீசப்படுகின் றன. கதவுகள் உடைபடுகின்றன. அதன் ஆசிரியன் பைரன் கைது செய்யப்படுகிருன், ஜோலாவை அனுப்பிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/58&oldid=759948" இலிருந்து மீள்விக்கப்பட்டது