பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 65 நற நற வெனக் கடிக்கின்ருன். சிறையதிகாரிகளை பயமுறுத்துகிருன். குடியரசுத்தலைவரின் கண்கள் கோபத்தால் சிவந்துவிட்டன. இன்னும் என்னென்ன விபரீதங்கள் விளையுமோ என்று கைகளே முறித்துக்க்ொள் கின்றனர் நீதி மன்றத்தார். - . ஒரு சமயம் டிரைபஸை டெவில்ஸ் தீவில் இருந்து அப்புறப்படுத்துவதற்காக இப்படித் தப்பியோடி இருக் கின்றன என்று பயப்படுகின்றனர் அதிகாரிகள். அங்கே யும் ஒடிப்பார்க்கின்றனர். தன்னே விடுவிக்கத்தான் வரு கின்ருர்களா என்று எழுந்து நடமாடுகின்ருன் டிரைபஸ். டிரைபஸ் தவிர, ஒரு காவலன் தவிர வேறு யாரும் அங்கில்லை. பாரீசில் அவனுக்காக யாரோ வாதாடு கின்ருர்கள் என்ற செய்தியே அவனுக்குத் தெரியாது. அப்படியிருந்தும் அவனுக்கு ஏதோ சிறிய நம்பிக்கைப் பிறந்தது. சென்றவர்கள் உடனே திரும்பிவிட்டார்கள். ஜோலா என்ருெருவன் இங்கே வந்தானு என்று கூடக் கேட்கவில்லை. ஜாடையாகப் பார்த்துக்கொண்டு திரும்பி விட்டார்கள். ஜோலா எங்கும் தேடியும் காணப்பட வில்லை. நாட்டின் துரதிருஷ்டம்தான். வெளியுலகி லிருந்து வெடிகுண்டு வெடிக்கப்போகின்றது. இன்னும் இரண்டோர் நாளில் தெரியும். எங்கு பார்த்தாலும் இதே பேச்சாக இருக்கிறது. யூத எதிர்ப்பு இயக்கத்தாரிடம் அவன் கிடைத்திருந்தால் துண்டுதுண்டாக வெட்டிப் புதைத்திருப்பார்கள். அவ், வளவு ஆத்திரம் கடல்போல் பொங்கி வழிகிறது. மீண்டுமோர் எச்சரிக்கை பழி தீர்த்துவிட்டீர்கள். பாவச் சுமையைத் தலை மேல் ஏற்றிக்கொண்டீர்கள். இன்னமும் சொல்லு 5 x. . ...' - - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/66&oldid=759957" இலிருந்து மீள்விக்கப்பட்டது