பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 எமிலி ஜோலா இப்படிக் கத்திக் கத்திப் பெருமூச்சு வாங்க முகத்தில் அறைந்து கொள்ளுகிருன். இரத்தம் வெளியே தெறித் தோடும் அளவுக்குச் சத்தம் போடுகிருன். வியர்வை அவனுடைய சட்டையைப் பஞ்சு பஞ்சாக்கும் அளவுக்கு பைத்தியம் பிடித்தவன்போல் அலறுகின்ருன். கிழிந்து நார் நாராகத் தொங்கும் சட்டை. உருமாறிப்போன உடல் பாவம் இவன் ஒரு காலத்தில் இராணுவ உடை தரித்துப் பாரிஸ் பட்டணத்தில் கம்பீரமாகப் பவனி வந்தவன், இன்று ஆயுள்தண்டனை பெற்று அலேகட வின் மத்தியிலே உள்ள டெவில்ஸ் திவில் திக்கற்று வாடுகின்ருன். - - " நான் செய்த குற்றம் என்ன ? இதே கேள்வி 'யைத்தான் அவன் தண்டிக்கப்பட்ட அன்று நீதி மன்றத் திலே கேட்டான். இன்றும் அந்த நாதியற்ற தீவிலே யும் கே ட் ட வண்ணமிருக்கின்றன். அக்கிரமக்காரர் களின் இலக்காகி வதைபடுகின்ருன் குற்றமற்றவன். கொடுமை செய்துவிட்டனர் குள்ளமதியினர் என்று ஞாலம் பதில் சொல்லும் என்று சில பல நேரங்களில் தினேக்கின்ருன். ஆணுல் அது தீவில், பாரிஸ் நெடுந் தூரத்தில் இருக்கிறது. தீவிலே திக்கற்ற நிலையிலே தியர்களின் சூழ்ச்சியினுல் தண்டனே பெற்ற டிரைபசுக். காக வாதாட யார் முன்வரப் போகிருர்கள்? இராணுவ, ரகசியத்தை வெளியிட்டான் என்ற குற்றம் சாட்டப் பட்டு ஆயுள்தண்டனே தரப்பட்டு அந்தப் பயங்கரத். தீவில் தள்ளப்பட்டிருக்கிருன் டிரைபஸ். அவன் மேல் சுமத்தப்பட்டது அபாண்டமான பழி என்று நிரூபிக்க முடியவில்லை. சட்டத்தின் பற்களிலே வைத்து நசுக்கப் பட்டிருக்கிருன் டிரைபஸ். உண்மைக் குற்றவாளிகள் டிர்ைபஸைப் பலியிட்டுச் சட்டத்தைச் சரிப்படுத்தி விட்டுத் தங்களைக் காப்பாற்றிக்கொண்ட்னர். அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/7&oldid=759961" இலிருந்து மீள்விக்கப்பட்டது