பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு - 59. திபோல் பரவிவரும்போது தடுக்காமல் இருப்பது தகாத செயல், இந்த நிலையை இப்படியே வளரவிட்டால் நமது ஜென்ம பூமி கொடை சாய்ந்து குப்புற வீழ்வது திண்ணம் என்று உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன். மீண்டுமோர் புணர் விசாரணை வேண்டும். இப்படிக் கேட்பது ஒவ்வொரு உண்மையான குடியரசு வாதியின் கடமை என்று சுட்டிக் காட்டுகின்றேன். அவமதித்தால் அவலநிலை, மதித்தால் நாட்டுக்கு மகோன்னத நிலை என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். . இதைப் போன்ற பல அறிக்கைகள் பாரிஸ் நகரில் பறந்த வண்ணம் உள்ளன. ஓய்ந்தபாடில்லே. இயந்திர சக்கரம் மணலில் அகப்பட்டுக்கொண்டு கொஞ்சநேரம் கரகரவெனச் சுற்றுவதும், மறுபடியும் சமமான தரை கிடைக்கும்போது வேகமாய் ஒடுவ்தும் போல இந்தச் செய்தி சிறிது நாட்கள் சமமான நிலையடைவதும், சில நாட்கள் சிக்கலான மணலில் அகப்பட்டுக் கொண்டு கரகரவென சுற்றி அதன் பற்சக்கரங்கள் தேய்வதுமான நிலையையுண்டாக்கிக்கொண்டிருக்கின்றது. - பொது மக்களின் கிளர்ச்சி பொது மக்களுடைய எண்ணமே ஒரு அலாதி யானது. எதிலும் விரைவில் ஒட்டிக்கொள்வதுமல்ல. எப்போதும் ஒட்டிக்கொள்ள்ாமலே ஒதுங்கிநிற்பதுமல்ல. பொதுமக்களை ஏதாவதொரு நல்வழிக்குத் திருப்ப வேண்டுமென்ருல் இரண்டு வழிகளைப் பின்பற்றவேண்டி யிருக்கிறது. ஒன்று :- அவர்கள் கொண்டிருக்கும் எண். ணத்துக்குச் சாதகமானவைகளேயேச் சொல்வி, அவர்களே முழுதும் நம்பவைத்து, அந்த நம்பிக்கையின் பேரால் ஏற்படுகிற அஸ்திவாரத்தை வைத்துக்கொண்டு அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/70&oldid=759962" இலிருந்து மீள்விக்கப்பட்டது