பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- சி. பி. சிற்றரசு - 7 முடியவில்லை. பிரஸ்தாப வழக்கு நேரடியாக அந்தந்த நபர்களே மாத்திரம்-சார்ந்ததா, அல்லது இந்த விஷயத் துக்குப் பிண்ணணியாக ஏதாவதொரு பயங்கர இயக்கம் உருவாய்க் கொண்டிருக்கின்றதா என்ற உண்மையைத் தெரிந்துகொள்ள முடியாமல் மக்கள் நெடுநாட்கள் திண்டாடினர்கள். ஆ ைல் இதுவரை எவ்வளவோ வழக்குகள் மின்னல் வேகத்தில் முடிக்கப்பட்டு, மூடப் பட்ட சவம்போல் போயிருக்கின்றது அப்படியிருக்க இந்த வழக்குமாத்திரம் இவ்வளவு பரபரப்பைஉண்டாக் குவானேன். இதுவும் புரியவில்லே மக்களுக்கு. ஆல்ை இதில் ஏதோ ஒரு முக்கியத்துவம் அடங்கி இருக்கின்றதென்பது மாத்திரம் உண்மை, என்ற முடி வுக்கு மக்கள் வர இவ்வளவு நாட்களாயிற்று. . . . டிரைபஸ் யார்? ஜோலா யார்? இந்தக் கேள்வி மக்கள் மனதைத் தூண்டியது. டிரைபஸ் ஒரு யூதன், ஜோலா யூதனல்ல. ஏன் அவனுக்காக இவன் முன்வந் தான்? இந்த நினவு அடுத்தபடியாகவந்தது. டிரைபஸ் தண்டனே அடைந்த பிறகு அவனுக்காக வாதாட முன் வந்தானே, எதற்காக? சொந்த லாபமா? சுயந்லமா பொதுநலமா என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினர் கள். ஜோலா ஒரு வழக்கறிஞன். ஆகையால்.முன்னே வந்தா.ை அப்படியும் இல்லை. ஜோலா வழக்கறிஞன் தான். சந்தேகமில்லை. அதற்காக ஜெயிக்க முடியாத், வழக்கில் தலையிடுவானேன்? அதற்காகச் சில கட்டுரை, கள் எழுதுவானேன்? சிறையிடுவானேன்? டிரைபஸ் குற்றமற்றவன் என்று வாதாடுவதற்குப் பதில், குற்ற முடையவன்தான் என்று சொல்லும் அந்தக் குறைமதி யினருடன் சேர்ந்து கொண்டிருந்தால் கொள்ளை கொள்ளேயாக பிராங்குகள் கிடைத்திருக்குமே. இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/72&oldid=759964" இலிருந்து மீள்விக்கப்பட்டது