பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 எமிலி ஜோவா ஒரு பக்கம் இருக்கட்டும், ஆசிரியன் பைரன் ஏன் இதில் அகப்பட்டுக்கொள்ளுகின்ருன்: உன் கட்டுரைகளே. வெளியிட முடியாது’ என்று ஒரு வார்த்தை சொல்லி யிருந்தால், அவன் தலைபோய்விட்டிருக்குமா என்ன ? உங்களே எல்லாம் தாக்கிக் கட்டுரை கொண்டு வந் தான் ஜோலா. நான் போட மறுத்துவிட்டேன். இதோ பாருங்கள் அ வ ன் எழுதியனுப்பிய கட்டுரைகளே ', என்று இராணுவ நீதிமன்றத்தாருக்கும், குடியரசுத் திலே வருக்கும் ஜூரர்களுக்கும், இாேளுருக்கும் காட்டியிருந் தால் ஆசிரியர் பைரனுக்கும் கொள்னே கொள்ளேயாகப் பரிசுகள் கிடைத்திருக்குமே, ஏன் இது அவனுக்குத் தெரிந்திருந்தும் செய்யவில்லே. இவர்கள் சொல்வதில் ஏதோ ஒரு உண்மையிருக்கத்தான் வேண்டும். இல்லை யானுல் இவ்வளவு விடாப்பிடியாக ஒரு நாட்டின் சட்ட வல்லமையை எதிர்த்துப் போராடுவார்களா? போகட்டும் இதுவரை ஜோலா சுமத்திய குற்றச் சாட்டுகளுக்கு நியாயமான பதில்கொடுத்த்தா சர்க்கார்? இல்லை. சவால்விட்டான். ஏற்றுக்கொள்ளப் பயந்து அவனே வாயடைத்து சிறைச்சாலேயிலே தள்ளிற்று. இது அடி முட்டாள்தனம். ஆதாரங்களைக் காட்டின்ை ஜோலா. அந்தகாரம் ஆழ்ந்த அறையிலே தள்ளிற்று ஆணவ மிக்க சர்க்கார், அருவருக்கத் தக்க விஷயம். கொடுமை இழைத்துவிட்டது. கோவெனக் கதறுகிருன் டிரைபஸ் என்று கோபுரத்தின் உச்சியிலிருந்து உரைத் தான் ஜோலா. கருனேகாட்டவில்லே சர்க்கார். களங் கம் நிறைந்துவிட்டது நாட்டில். நாம் கண்மூடிக் கொண்டிருப்பதில் பயனில்லை. இப்படிப் பேசிற்று மககள மனறம.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/73&oldid=759965" இலிருந்து மீள்விக்கப்பட்டது