பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 73. டிரைபஸ் டெவில்ஸ் தீவில் இருந்து கொண்டே பல மண்டலங்களின் மக்கள் அனுதாபத்தை உருவாக்கு கின்றன். ஜோலா சிறைச்சாலையிலிருந்து தப்பி வேருேர் இடத்தில் இருந்துகொண்டே நீதியை உருவாக்குகின் ருன். பிரபல வழக்கறிஞர் லபோரி மேஜையிலமர்ந்து கொண்டு வாதத்தை உருவாக்குகின்ருர். பெருமைக் குரிய இலக்கியாசிரியர் அன்தோல் பிரான்சு நல்லதோர் மார்க்கத்தை உருவாக்கிக்கொண்டிருக்கின்ருர், மக்கள் மன்றம் கிளர்ச்சியை உருவாக்கிக்கொண்டிருக்கின்றது. இவ்வளவு சக்திகளும் இரண்டோர் நாளில் ஒன்ருய்க் கூடிப் பிரெஞ்சு நாட்டின் வஞ்சனக் கிடங்குக்குத் தி வைக்கப்போகின்றன. அதற்கான சாயல் பல விடங் களில் தென்படுகின்றது. ஒற்றர்கள் மூலம் இதை அறிந்த எஸ்டரெஸி குலேநடுங்கிக்கொண்டிருக்கின்ருன். வாழ்க ! . எந்த மக்கள் அன்று ஜோலா ஒழிக!' என்ருர் களோ, அதே மக்கள் இன்று ஜோலா வாழ்க!" என் கின்றனர். எந்த சமூகம் அன்று டிரைபஸ் ஒழிக! " என்று கூச்சலிட்டதோ அதே சமூகம் இன்று, டிரைபஸ் வாழ்க!' என்றது. இந்த வாசகங்கள் பொருந்திய அட்டைகளை எடுத்துக்கொண்டு ஊர்வலம் ஒன்று கிளம் பிற்று. டிரைபஸை விடுதலை செய், ஜோலாவை நாட் டிற்குக் கொண்டுவா, வழக்கைத் தீரவிசாரி, நீதிமன்றமே! நீதியை வழங்கு, மந்திரிசபையை மாற்று, இராணுவ நீதி மன்றத்தைக் கலத்துவிடு' எஸ்டரெஸியை வேலையி விருந்து நீக்கு ஆசிரியன் பைரனே, விடுதிலே செய் என்ற கோஷங்கள் வான்முட்ட்ப் புறப்பட்டுவிட்டது. மக்கள் கூட்டம் பாரிஸ் நகர முழுதும் சுற்றிற்று. குடியரசுத் தலைவரின் மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டம், ஜூரர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/74&oldid=759966" இலிருந்து மீள்விக்கப்பட்டது