பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 75 கள்? இல்லை. இல்லை. அவர்களை அப்படி வெறுக்க வைத்துவிட்டன ஜோலாவின் எழுத்துக்கள். அரசாங் கத்தையே மாற்றியமைத்துவிட்டன. . . . . . கிளிமான் லோ என்ற நிபுணரும் சிறந்த அரசியல் ஞானியுமான மேற்படியார்தான் பிரெஞ்சு தாயகத்தின் தனிப்பெரும் குடியரசுத் த்லைவராகப் பதவி ஏற்கிருர், முதல் உலகப் பெரும் போரில் வர்சேல்ஸ் ஒப்பந்தத்தை எழுதிச் சண்டையிலிடுபட்ட நாடுகளைச் சமாதானப் படுத்தி, ரத்தஞ் சிந்தா உணர்ச்சியைத் தூண்டி வெற்றி கண்ட விவேகி கிளிமான்ஸோ என்பவர்தான் குடியரசுத் தலைவராகின்ருர், - - - - இதற்குள் டிரைபளUடைய டெவில்ஸ் தீவின் இருண்ட வாழ்க்கைச் சகடம் பதிைேரு சுற்றுகள் சுற்றி வந்துவிட்டன. பதிைேரு ஆண்டுகள் டெவில்ஸ் தீவில் வாடின்ை. - மீண்டும் அவனுக்கு இராணுவத் தலைமைப் ப்த்வி கூடத் தேவையில்லை. ' குற்றமற்றவன் ' என்று சட்ட ரீதியாகச் சொல்லி, அடுத்த நாளே அவன் மடிந்து விடுவதாலுைம் அதற்காக அவன் கவலைப்படவில்லை. எப்படியும் தன்மேல் ஏற்றப்பட்டிருக்கும் பெரும்பழி இறக்கப்படவேண்டும், துரோகிகளால் சுமத்தப்பட்ட" துரோகச் செயல் விளக்கப்படவேண்டும், தன். துய் மையை உலகறியவேண்டும், நீதி வெட்ட வெளியில், நடமாடவேண்டும், தான் பாரீஸ் நகரத்தின் அழகான தெருக்களில் அலேய நேர்ந்தாலும், அல்லது அந்த மாகடலின் சுருமீன்களுக்கு இறையாவதானுலும், துரோகி என்ற கெட்ட பெயரோடு சாகக்கூடாது, தூய்மையானவன் என்ற நற்பெயரோடு இறக்கவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/75&oldid=759967" இலிருந்து மீள்விக்கப்பட்டது