பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 - எமிலி ஜோலா தனது தூய்மையான சேவையில் டிரைபஸ் தளராத நம்பிக்கைகொண்டான். என்ருவது ஒரு நாள் உண்மை நிச்சயமாக வெளிவந்தே திரும், என்ற நம்பிக்கைக் கொண்டிருந்தான். எனினும் அந்த நம்பிக்கை தேய் பிறை போல் தேய்ந்துகொண்டே வந்துவிட்டது. ஏனெ னில் பதினுெரு ஆண்டுகள் கடந்துவிட்டன. இனி ஏது முடிவு ? முடிவு தீவில் மடிவதுதான். இனிமேல் யார் இதற்காகப் போராட முன் வரப்போகின்ருர்கள்? ஒரு வேளே மனேவியும் சகோதரனும் முன்வரலாம். | - பொய்யையே மெய்யாக்கிக் காட்டிய இந்தப் பொல்லாதவர்களுக்காகத் தன் குடும்பத்தாரின் முயற் சியையா மறைக்க முடியாது. இனி யாரும் தனக்காக வாதாட முடியாது. வழக்கறிஞர்கள் முன் வரமாட்டார் கள். இந்தப் பயங்கரமான கடலால் சூழப்பட்ட டெவில்ஸ் தீவு தவிர வேறு யாரும் துணயில்லை. தனது மரணக் குழிதான் பிறந்த தாயகத்திடம் இல்லே. இந்தத் தீவில்தான் யார் என்னப்பற்றி எப்படிப் பேசினுலும் என்ன எழுதினுலும் நான் சாகும்போதும் குற்றமற்ற வன்' என்று சொல்லிக்கொண்டுதான் சாவேன். இப்படி ஒவ்வொரு நாளும் பேசிக்கொண்டிருக்கின்ருன் டிரைபஸ் அந்தப் படுபாதகத் தீவில். . பாரிசில் குடியரசுத் தலைவராக கிளிமான் லோ தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அவர் பதவி ஏற்ற உடனே அதுவரை நாட்டை அலக்கழித்துக் கொண் டிருந்த, டிரைபஸ் வழக்கு, ஜோலாவின் கட்டுரைகள், மக்கள் கிளர்ச்சி ஆகியவைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய கட்டாயம் குடியரசுத் தலைவருக்கு வந்துவிட்டது. மேலும் டிரைபஸ் வழக்கில் உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/76&oldid=759968" இலிருந்து மீள்விக்கப்பட்டது