பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 77 பான தகவல்கள் கிடைக்க வேண்டுமென்ருல் மந்திரி சபையை மாற்றியமைத்தாலன்றி முடியாது என்று தெரிந்துகொண்ட காரணத்தால், உடனே மந்திரி சபையை மாற்றியமைத்துவிட்டார். அடுத்து, அதே இராணுவ நீதிமன்றத்தை வைத்துக்கொண்டிருப்போ மாயின், அவர்களுக்கிருக்கும் செல்வாக்கால், பிரஸ்தாப வழக்குக்குச் சம்மந்தப்பட்ட உண்மைகள் வெளி வரா மலும் போகக்கூடுமென்று கருதி, அந்த முதல் இரா ஆணுவ நீதிமன்றத்தையும், இரண்டாவது இரானுவ நீதி மன்றத்தையும் மாற்றியமைத்துவிட்டார். டிரைபஸ் வழக்குப் 46THAFTrಒT இவருக்கு முன்பிருந்த குடியரசுத் தலைவரால் நிரா கரிக்கப்பட்ட மேத்யூ டிரைபஸ் புனர் விசார்ண மனுவை மறுபடியும் அங்கீகரித்து, புதிய ஜூரர்களைத் தேர்ந் தேடுத்து வழக்கை மீண்டும் விசாரணை நடத்த ஏற்பாடு செய்தார். போதிய காலங் கொடுத்து பிரஸ்தாப வழக்கு சம் மந்தமாகக் கிடைத்த ரகசியத் தகவல்கள், கடிதங்கள் ஒற்றர்கள் சேகரித்து வைத்திருந்த உண்மைகள், ஜோலா வெளியிட்ட கருத்துக்களை ஏந்திவந்த அரோரி, பிகாரோ பத்திரிகை சேகரிப்புகள், இரகசிய ஒற்றர் இலாகாவில் வேலேபார்த்துவந்த பாஸ்டின் என்ற பெண் மணி கண்டுபிடித்த டிரைட்ஸ் போட்டதாகப் போர்ஜரி கையெழுத்திடப்பட்ட பொய்க் கடிதங்கள், எஸ்டரெசி யின் வழக்கு விசாரணை ரிகார்டுகள், ஜோலா தண்டிக்கப் பட்டதற்குண்டான உண்மையும் நியாயமும் நிறைந்த காரணங்கள், டிரைடிலிடம் அனுதாபம் காட்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/77&oldid=759969" இலிருந்து மீள்விக்கப்பட்டது