பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 8; கொலேக்களத்துக்கா ? என்ருன். இல்லை, இராணுவ உடைதரிக்க என்றனர், "உண்மையாகவா ? அன்பர் களே வெந்த என் உள்ளத்தை வேலால் குத்தாதிர் கள். நொந்துபோயிருக்கின்றேன். என் சிந்தையைக் கலக்காதீர்கள். இங்கேயேக் கிடந்துச்சாகிறேன். என்னே அழைக்காதீர்கள் ', என்றழுதான். பாரீசில் என்ன நடந்தது என்பதை அறிய முடியாத பரிதாப பிம்பம். விடுதலை என்றனர் வந்தவர்கள். எனக்கா விடுதலை கரந்தபால் காம்புக்குள் புகுமா-விழுந்த கனி கிளேயில் ஒட்டாதே. உதிர்ந்த மலர் செடியில் சேராதே. கடைந்த வெண்ண மோரில் கலவாதே. அதேபோல் டிரைபசுக்கு விடுதலையிருக்காதே இல்லை, நிச்சயமாக இதோ குடியரசு முத்திரையிட்ட ஆணே -- எனக்கும் விடுதலையா ? இந்த ஏழைக்கா ? இந்த துர்ப்பாக்கியனுக்கா விடுதலே ? பதினுேரு ஆண்டுகள் இந்தப் பயங்கரத் திவில்வாடியதால் வயோதிகத் தோற் றத்தை அடைந்திருக்கும் இந்த ஏழைக்கா விடுதலே ?. யாரப்பா எனக்காகப் போரிட்டவர்கள்? என்னே ஈன்ற என் தூயத் தாயகமே கேட்டதா? பெருமை பொருந்திய குடியரசுத் தலைவர் என்பால் கருணை காட்டினரா? சட் டங்கள் என்னச் சரியாக அடையாளம் தெரிந்துகொண் டனவா? நீதிக்கு நான் நெருங்கிய நண்பனுய்விட் ட்ேனு ? யாரப்பா எனக்காகப் போராடியவர்கள் ? என் மனேவியா? உடன் பிறந்தவன? உற்ற நண்பர்களா ? இராணுவ நீதிமன்றமா? யார் எனக்காக போரிட்டது? என்பால் இரக்கம் கொண்டவர்கள் இன்னும் உயிரோடு இருக்கின்ருர்களா? நீதிதிநிலைபெற்றிருக்கும் வரை அவர்களும் சாகாவரம் பெற்றிருக்கின்ருர்கள்ா? யாரது, எனக்காகத் தன் உள்ளத்ண்த்த் திறந்து அந்த பளிங்கு உள்ளத்தில் என் தூய்மையைக் காட்டிய அதிமேதை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/82&oldid=759975" இலிருந்து மீள்விக்கப்பட்டது