பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 83 ஆண்டுகள் விடாமல் போரிட்டு இப்பேதைக்கு உயி rளிக்க முன்வந்தான் என்ருல் அவ்வுத்தமன்தான் என் வழிகாட்டி. அவனைக் காண நான் எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும்? வருங் காலத்தில் ஜோலா யார் என்று யாராவது வெளிநாட்டார் கேட்டால், அவன் என் தாயகத்தான், எனது மண்ணின் செல்வன், என் உடன் பிறந்தான் என்று சொல்ல வாய்ப்புத் தேடித் தந்து, இடிந்துவிட்ட எனக்கு மீண்டும் நல்லதோர் வாழ் வையும் தேடித் தந்த ஜோலா. எனக்காகப் போராடினன். போராடின்ை என்ருல் உலகத்தையே எதிர்த்துப் போராடினன் என்றல்லவா பொருள். பலம் பொருந்திய இராணுவத் தலைவனுகிய என்னலேயே முடியவில்லையே? எப்படி ஒரு சாதாரண் ஜோலா போராடினன்? கேட்கக் கேட்க ஆச்சரியமா கத்தான் இருக்கிறது. உ.ம். ஏன் இவ்வளவு அவசரம் ? எப்படியும் அந்த ஏந்தலப் பார்க்கத்தான் போகிருேம்'. என்று இப்படி எல்லாம் சொல்லிச் சொல்லிக் குது கலிக்கின்ருன். உடனிருந்தவர்கள் உண்மையைச் சொல்லவில்லை. ஒரு சமயம் ஜோலாவின் முடிவைப் பற்றிச் சொன்னுல் இந்த நேரத்தில் இவனுக்குப் ன்பத் தியம் பிடித்தாலும் பிடித்துவிடும் என்று வாளாவிருந்து விட்டனர். - f - கப்பல் கரை சேர்வதற்கு முன்பே கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் மலர் மாலேகளோடு காத்துக் கிடக்கின்றனர். கப்பலும் கரை சேர்ந்தது. நீண்ட தாடி வளர்ந்து, கோடுகள் விழுந்த நெற்றி, சுருங்கிய கன்னங்கள், கருகருத்த முகம், தள்ளாடிய நடை யோடு கீழே இறங்கின்ை டிரைபஸ் இவன அந்தக் கம்பீர நடை நடந்த டிரைபஸ், கடல் காற்று இவனக் 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/84&oldid=759977" இலிருந்து மீள்விக்கப்பட்டது