பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 х எமிலி ஜோலா கருவாடாக்கிவிட்டது. ரத்தம் சுண்டிவிட்டது. எப்ப டியோ உயிரை மட்டிலும் தாங்கி மேதை ஜோலாவின் உதவியால் விடுதலைபெற்றுவிட்டான். பாவம் ! ஒருவித குற்றமும் செய்யாதவனே வீகை வாட்டி வதைத்துவிட் டனர். எனினும் உயிரோடு காண்கிருேம். மனேவி சேர்த்து. அணேத்துக் கொண்டாள். உடன் பிறந்தானும் அதையே செய்தான். சுற்றத்தார், உறவினர் கண்களில் புதிய ஒளி தோன்றிற்று. உலகத்தையே கலக்கக் கார ணமான டிரைபஸ் விடுதலை பெற்றுவிட்டான் என்று ஊரெல்லாம் பேசினர்கள். § அடுத்த நாள் மீண்டும். அதே இராணுவத் தலைமைப்பதவியை அளிக்கவேண்டுமென்று குடியரசுத்தலைவரை முதல் நீதிபதியாகப் பெற்ற பாஸ் உயர்நீதிமன்றம் அளித் திருக்கும் தீர்ப்பின்படி, எந்த மைதானத்தில் பதிைேரு ஆண்டுகளுக்கு முன்பு தன் இராணுவ உடையைக் கழற்றிக் கைதியின் உடுப்புகளை மாட்டினர்களோ அதே மைதானத்தில் மீண்டும் இராணுவ உடைகளைக் தரிக் கின்ருன். அன்று அவன் வாளே இரண்டு துண்டுகளாக உடைத்தார்கள். இன்று அதைவிடச்சிறந்த உடை வாளைப் பெறுகின்ருன். - - டிரைபஸ் விடுதலை பெற்றதை அறிய இராணுவ வீரர்கள் பாரீஸ் நகர முழுவதிலும் பவனி வருகின்ருர்கள். தலைவன் டிரைபஸ் நன்ருக அலங்கரிக்கப்பட்ட குதிரை மேல் ஏறிப் படைகள் புடைசூழப் பல பிரபல தெருக் களின் வழியாகப் பவனிவருகின்றன். நம்பமுடியாத அதிசயம் ஒன்று நாட்டில் நடப்பதை எண்ணி நாட்டி லுள்ளோர் நகைமுகம் கொண்டர்ர்கள். டிரைபஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/85&oldid=759978" இலிருந்து மீள்விக்கப்பட்டது