பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு - 85 டெவில்ஸ் தீவுக்கு அன்று கொண்டுபோகப்படும்போது கண்ட எல்லோருமே.இன்று ஒருசிலர் தவிர மற்றவர்கள் அனவருமே டிரைபலைக் கண்டார்கள். அன்று இவனேக் கைதிக் கோலத்தில் பார்க்காத ஒருவன் இன் றும் காணவில்லை. அன்று இவனப் பார்க்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லே. இன்று இவனைப் பார்க்க முடியவில்லை. அவன்தான் ஜோலா - உண்மையின் தந்தை-பொதுவாக இவனே அவன் கண்டதேயில்லே. விடுதலே பெற்றுவிட்டான். உண்மைதான் எனினும் துர்பாக்கியந்தான் இவன். ஏனெனில், : ஜோலாவைக் கண்ணுல் காணக்கொடுத்துவைக்காதவன்' என்கின்றனர் மக்கள். வாத்திய கோஷங்களுக்கிடையே இந்த முழக் கம் வான் பறவையின் முழக்கமாயிற்று. இந்த இடி முழக்கத்தைக் கேட்ட நாகம்போல் நடுங்கிவிட்டது எதிர்ப்புச் சக்திகள். ஊர்வலத்தைத் துரிதமாக நடத்தக் கட்டளையிடுகின்ருன். தன் மள்ளிகைக்குச் சென்றவுட்ன் மனேவியிடம் கொஞ்சுவதல்ல, இவனுக்கிருந்த அலுவல். தன்னே விடுவித்த தனிப்பெருந்தலேவன் ஜோலாவைக் காணவேண்டும். நெஞ்சுருகி நீர்மல்க வேண்டும். தனக்காக அவன் பட்ட கஷ்டங்களுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்ளவேண்டும். அத்தகு மேதை தன் வர்ழ் வின் அழியாத முத்திரையாகி விட்டதற்காக நன்றி செலுத்த வேண்டும். அந்தப் பேரறிஞனுடைய வாழ்வில் எவ்வளவு இடுக்கண்கள் இருந்தாலும் ஒரு நொடியில் களேந்தெறிய வேண்டும். எப்படி இருப்பாரோ? என்ன உருவமோ? குணத்தில் அணையா விளக்கு. அது மாத் திரம் உறுதி. ஆல்ை தோற்றத்தில் எப்படி இருப் பாரோ? ஒவ்வொரு விடிையும் ஒரு யுகமாகக் கழி கின்றது. தன் மனவேகத்தையும் கடந்துசென்று மாளிகையையடைந்து போர் வீரர்களுக்கு வணக்கஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/86&oldid=759979" இலிருந்து மீள்விக்கப்பட்டது