பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 எமிலி ஜோலா யில்லே. சட்டப்படி, அதுவும் உயர்தர நீதிமன்றத் தாரால், அதிலும் இராணுவ உயர்தர நீதிமன்றத் தாரால் தண்டிக்கப்பட்டிருக்கின்ருன், தான் உண்மை யான குற்றவாளி அல்ல என்பதற்குத் தக்க ஆதாரங்கள் காட்டாததால் தண்டிக்கப்பட்டிருக்கின்ருன். வழக்கறி ஞர்கள் கேள்வி கேட்க, ஜூரர்கள் ஆழ்ந்து சிந்திக்க, திேபதி முடிவுக்குப்பின் தண்டிக்கப்பட்டிருக்கின்ருன். இந்த நிலையில் இவனுக்காக வாதாட யார் முன்வரு வார்கள் ? இவன் குற்றவாளி என்பதற்குப் போதிய ஆதாரங்களும், சாட்சியங்களும் இருந்ததால்தான் தண்டித்தார்கள். இப்படிப் பேசுகின்றனர் மாளிகை மண்டுகள். அதுவும் இவன் அந்தஸ்து பொருந்திய இராணுவ அதிகாரியாய் வாழ்ந்ததால்தான் இதுவும் பேசப்பட்டது. ஒரு சாதாரண மனிதனுக இருந்திருந் தால் அதைப் பற்றிய பேச்சே எழுந்திருக்காது. இவன் நன்ருகப் படித்தது குற்றம். நாகரிகமாக வாழ்ந்தது குற்றம். இராணுவத் தலைவனுக இருந்தது குற்றம். நாட்டைப் பலமுறைகளில் காப்பாற்றியது குற்றம். படைகளே நடத்தியது குற்றம். இவைகள் எல்லாவற்றையும்விடப் பெரிய குற்றம், இவன் யூத கைப் பிறந்ததுதான். அது அன்றைய அரசியல் நிலை யில் மன்னிக்க முடியாத ஒரு குற்றம். டிரைபஸ் செய்தவை இதைப்போன்ற குற்றங்கள் தாம். இதற்காகத் தண்டி க் கப்பட் டி ருக்கி ன் ரு ன். முன் வந்தான். தன்தலை போகுமே என்று கருதாது துணிந்து முன்வந்தான். எதிர்ப்புச் சக்தியின் தன்மை யையும், அளவையும் பொருட்படுத்தாது முன்வந்தான். நீதியை நிலைநாட்ட, கைவிடப்பட்டவனேக் காப்பாற்றி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/9&oldid=759983" இலிருந்து மீள்விக்கப்பட்டது