பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 'சம்மதிப்பார் தம் கணவருக்குப் பிறகு அந்த அம்மாள் அந்த வீட்டை வைத்துக்கொள்வதாக இல்லை; விற்று விடுவதாக இருக்கிறார். அவர் விரும்பினால் அதற் குரிய தொகையைக் கொடுத்து அதை நானே இவருக்காக வாங்கிக்கொண்டு விடுகிறேன்!” என்றார் பாகவதர். " அப்படியானால் சரி' என்று எல்லோரும் அதற்கு அனுமதித்தார்கள். உடனே பாண்டு வாத்தியம் முழங்க, கிருஷ்ண மூர்த்தியின் சவப்பெட்டி பாகவதரின் பெரியம்மா வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே பொதுமக்களின் பார்வைக்காக அது வைக்கப்பட்டதும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒருவர்பின் ஒருவராக வந்து, அதற்குத் தங்கள் கடைசி அஞ்சலியைச் செலுத்திவிட்டு சென்றனர். மறுநாள் காலை 10 மணிக்குத் திறந்த காரில் உயரமாக அமைக்கப்பட்டிருந்த மேடையின் மேல் கிருஷ்ணமூர்த்தியின் சவப்பெட்டி வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டது. அந்தக் காருக்கு முன்னால் பாகவதர் நடந்து செல்ல, ஆயிரமாயிரம் மக்கள் அவரைத் தொடர்ந்து சென்றனர். ஆம், அவருக்கு நேர்ந்த துயரத்தைத் தங்களுக்கு நேர்ந்த துயரமாகவே அவர்கள் கருதினர் கடைசியாகப் பாகவதரின் தந்தை சமாதி வைக்கப் பட்டார். மண்ணுலகில் தம் மகன் மேல் தம்மைத் தவிர வேறு யாரும் உரிமை கொண்டாடுவதை விரும்பாத அந்த ஆத்மா விண்ணுலகிலாவது அதைவிட்டுக் கொடுத்ததோ, என்னவோ? தந்தைசொல் மிக்கதோர் மந்திரமில்லை... தந்தை கிருஷ்ணமூர்த்தி மறைந்து ஒரு மாத காலம் ஆகியிருக்கும். அதற்கு மேல் பாகவதரை விட்டுவைக்கத் எம்.கே.டி.7