பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 இந்த வழியைப் பற்றி அவர் ஒருநாள் தம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது 'உங்களைப் போல் தான் கிட்டப்பாவும் சொல்லிக்கொண்டிருக்கிறார்!" என்றார் அவர்களில் ஒருவர். பாகவதர் சிரித்தார். *: "ஏன் சிரிக்கிறீர்கள்? என்றார் நண்பர். 'ஒன்றுமில்லை; சும்மா சிரித்தேன்' என்று பாகவதர் மழுப்பினார். நண்பர் விடவில்லை; "நீங்கள் காரணமில்லாமல் சிரிக்க மாட்டீர்களே! கதையைச் சொல்லுங்கள்?' என்று அவரை வற்புறுத்தினார்: அதற்குமேல் பாகவதர் சொன்னார். வெளியூரில் விலைபோகும் சரக்கு உள்ளூரில் விலைபோகாது என்பார்கள். அதற்கு நேர் விரோதமானது என்னுடைய கதை. எனக்கு வெளியூர்களில் எவ்வளவுக் கெவ்வளவு மதிப்பு இருந்ததோ அவ்வளவுக்கவ்வளவு மதிப்பு உள்ளூரிலும் இருந்தது. உள்ளூரில் என்றால் உள்ளூரை மட்டுமே சொல்கிறேன்; என் வீட்டில் எனக்கு அந்த மதிப்பு இல்லை! ஆமாம்; நாடகத்துறையில் நான் ஈடுபடுவதை விரும்பாத என் அப்பா அப்போது என்னை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டார்: நண்பர்கள் சிலருடைய உதவியுடன் நான் அந்தச் சமயத்தில் திருச்சியிலுள்ள சிந்தாமணி சத்திரத்தில் தங்கியிருந்தேன். ஒரு நாள் ஒரு குதிரை வண்டி வந்து அந்தச் சத்திரத்துக்கு முன்னால் நின்றது. நான் எட்டிப்பார்த்தேன்; அந்த நாளில் பிரசித்தி பெற்ற நடிகர்களில் ஒருவராயிருந்த திரு. எஸ். ராதாகிருஷ்ண பாகவதர் நாலைந்து பேருடன் வண்டியை விட்டு இறங்கி உள்ளே வந்து கொண்டிருந்தார். 'திரு. எஸ்.ஜி. கிட்டப்பாவின் குழுவில் உள்ள இவர் நம்மைத் தேடி ஏன் வரவேண்டும்?' என்று நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன்.