பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 'நமஸ்காரம். இவர்கள் நாடகக் காண்ட்ராக்டர்கள்; திருச்சி பாலக்கரைக் கொட்டகையில் கிட்டப்பாவின் நாடகங்களை நடத்துவதற்காக இங்கே வந்திருக் கிறார்கள்!" என்று அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் எஸ்.ஆர். பாகவதர். நானும் பதிலுக்கு என்னுடைய நமஸ்காரத்தைத் தெரிவித்துவிட்டு, 'அப்படியா, ரொம்ப சந்தோஷம்!" என்றேன். 'இங்கே கிட்டப்பாவின் முதல் நாடகமாக வள்ளித் திருமணம் நடக்கவிருக்கிறது. கே.பி.சுந்தராம்பாள் வள்ளி; கிட்டப்பா வேலன், வேடன், விருத்தன். நீங்கள் அந்த நாடகத்தில் நாரதராக நடிக்கவேண்டுமென்று இவர்கள் விரும்புகிறார்கள். 'ஏன், நீங்கள் தானே அவருடைய நாடகங்களில் நாரதராக நடிப்பது வழக்கம்?" - ஆமாம்; அதற்குரிய சம்பளத்தை வேண்டுமானால் இவர்கள் எனக்குத் தந்துவிடுவதாகச் சொல்கிறார்கள். எனக்குப் பதிலாக நீங்கள் நாரதராக நடித்தால் இன்னும் கொஞ்சம் விசேஷமாக இருக்குமென்று இவர்கள் நினைக்கிறார்கள். 'அதற்கு நீங்கள் சம்மதித்து விட்டீர்களா' 'சம்மதிக்காமல் என்ன எனக்குத்தான் தொழில் செய்யாமலே சம்பளம் கிடைத்துவிடுகிறதே! அதுவா பெரிது? சிலருக்கு இதில் தன்மானப் பிரச்னை வந்து குறுக்கிடுமே?” 'குறுக்கிடுவதாவது: அதெல்லாம் ஒன்றுமில்லை; வேண்டுமென்றே சிலர் அதை இழுத்துப் போட்டுக் கொண்டு அவஸ்தைப்படுவார்கள். அந்த மாதிரி அவஸ்தை களுக்கெல்லாம் நான் எப்போதுமே என்னை உள்ளாக்கிக் கொள்வதில்லை. என்னைப் பொறுத்தவரை எனக்குப்