பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 கொண்டு கலைந்து செல்லுங்கள், பார்க்கலாம்?' என்று உள்ளம் உருக வேண்டினார். 'ஒரு நிபந்தனை' என்றார் கூட்டத்தில் இருந்த ஒருவர். 'என்ன நிபந்தனை?' என்றார் நாயுடு. 'பாகவதரையும் மேடையின் மேல் ஏற்றுங்கள்; இவ்வளவுதூரம் வந்ததற்கு அவரை ஒரு முறை கண்குளிரப் பார்த்துவிட்டாவது போகிறோம் என்றார் அவர். 'அதுதான் சரி; அதுதான் சரி' என்று அவர் சொன்னதை மற்றவர்கள் ஆமோதித்தனர். 'அப்படியே ஏற்றுகிறேன்; அவரைப் பார்த்ததும் நீங்கள் போய்விடவேண்டும்' என்று பாகவதரை மேடையின் மேல் ஏற்றினார் நாயுடு. மக்கள் பார்த்தார்கள். ஒருமுறையல்ல; பல முறை பார்த்தார்கள். பார்த்தபிறகு என்ன சொன்னார்கள்? 'மனுஷனை நேருக்கு நேராகப் பார்த்தபிறகு அவர் பாடுவதைக் கேட்காமல் போகக்கூடாது என்றல்லவா தோன்றுகிறது? பாடச் சொல்லுங்கள்; நடந்ததை மறந்து எங்களுக்காக அவரை மேலே பாடச் சொல்லுங்கள்' என்று சொன்னார்கள்! அதற்கு மேல் நாயுடுதான் என்ன செய்வார் பாவம், பேசாமல் உட்கார்ந்துவிட்டார். பாகவதரும் வேறு வழியின்றிப் பாடினார். ஆனால் நாயுடு சொன்னதுபோல அந்தச் சம்பவத் துக்குப் பிறகு அவர் பாடிய பாடல்கள் எடுபட வில்லை. ராகம் பிசகிற்று; தாளம் தவறிற்று; பாடல்களின் வரிகள் பல இடையிடையே மறந்தன. அவற்றை இன்னொருவர் அவருக்கு ஞாபகப்படுத்த வேண்டிய தாயிற்று.