பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 என்பதையும், அரசாங்கம் என்று ஒன்று இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என்பதையும் அவர் நன்கு உணர்ந்திருந்ததுதான். இதை உணர்ந்திருந்த அவர் ஏனோ இன்னொன்றை மட்டும் உணர்ந்திருக்கவில்லை. அதாவது, 'பொய்க்கு மட்டுமல்ல; உண்மைக்கும் இந்தக்காலத்தில் விளம்பரம் தேவை என்பதுதான் அது. அதனாலேயே அவர் உண்மையான உதவி நிதி நாடகங்கள் எத்தனையோ நடத்தியிருந்தும், உண்மை யான உதவி நிதிக் கச்சேரிகள் எத்தனையோ செய்திருந்தும், அவையனைத்தும் பொய்யாய், பழங்கதையாய், கனவாய் மெல்லப்போய்விட்டன! அப்படிப் போய்விட்ட உதவி நிதி நாடகங்களில் ஒன்று விளாத்திகுளம் சுவாமிகளுக்காக நடத்திக் கொடுத்தது. மதுரையை அடுத்த ஒரு கிராமத்தில் நடக்கவிருந்த அந்த நாடகத்துக்குப் பாகவதர், திருமதி எஸ். டி.சுப்பு லட்சுமி, திரு.ராமநாதன் ஆகியோருடன் தம் காரில் சென்றுகொண்டிருந்தார். வழியில் ஒரு காட்டாறு: திடீரென்று அதில் வந்த வெள்ளம் அவர்களை மேலே போகவிடாமல் தடுத்துவிட்டது. அதற்காக பாகவதர் கலங்கினாரா? இல்லை; பெரிய ஜமக்காளம் ஒன்றை எடுத்து ஆற்றங்கரையில் விரித்துப் போட்டுத் தம் சகாக்களுடன் உட்கார்ந்துவிட்டார். "ஆஹா! ஒரு பொது இடத்தில் இவ்வளவு சுதந்திரமாக உட்கார்ந்து எத்தனை நாட்களாகிவிட்டன! நான் பாடகனாகவும், நடிகனாகவும் ஆனாலும் ஆனேன்; எங்கே போனாலும் என்னைச்சுற்றி ஒரே கூட்டம், ஒரு கணம் என்னை நிம்மதியாக இருக்கவிடுகிறார்களா ரசிக மகாஜனங்கள்? அவர்களுடைய அன்புத்தொல்லையில் சிக்கிநடிகைகள்தான் தவிக்கிறார்க ளென்றால் நடிகர்களுமல்லவா தவிக்கவேண்டி யிருக்கிறது!”