பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 ஏற்றிவிட்டு, 'நாம் இருவரும் நடந்தே போய்விடு வோமா?' என்றார் பாகவதர், ராமநாதனை நோக்கி. 'இந்தச் சகதியிலா?' என்றார் அவர். "சகதியாவது குழந்தைகளுக்கு இதைக்கண்டால் எவ்வளவு குஷியாக இருக்கும், தெரியுமா?" என்றார் இவர். 'நாம் குழந்தைகள் இல்லையே?’’ 'இல்லாவிட்டாலும் என்ன? இப்போதைக்கு நாம் உருவத்தில் குழந்தைகளாக முடியாவிட்டாலும் உள்ளத்தி லாவது குழந்தைகளாக வேண்டியதுதான்!” என்று பாகவதர் சகதியில் இறங்கி நடக்கவே ஆரம்பித்துவிட்டார். அதற்குமேல் ராமநாதன் என்ன செய்வார், பாவம்! அவருடைய சாரீரம் மட்டுமல்ல, சரீரமும் கொஞ்சம் கனமானது. அந்தக் கனமான சரீரத்தைத் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு, அவர் பாகவதருக்குப் பின்னால் நடக்க முடியாமல் நடந்தார் அவருக்கு முன்னால் நடந்த பாகவதர் சும்மாவாவது நடந்தாரா? அதுதான் இல்லை; 'ஆஹா என்ன சுகம், என்ன சுகம் சதக், சதக்! என்ன தாள லயம். என்ன தாள லயம்! இப்படித் தாள லயத்தோடு நடக்க நாம்கொடுத்து வைத்திருந்தோமே!" என்று படுகுஷியாகப் பேசிக் கொண்டே நடந்தார். ராமநாதனுக்கு எப்படியிருக்கும்? 'உங்களுக்குள்ள சந்தோஷத்தில் நீங்களும் குழந்தைகளைப்போலச் சகதியை வாரிமேலே பூசிக்கொண்டு விடப் போகிறீர்கள்? "என்றார் சற்றே எரிச்சலுடன். 'வாரி வ்ேறு பூசிக்கொள்ளவேண்டுமா, என்ன? அந்தச் சிரமத்தை நமக்கு வைக்க வேண்டாம் என்றுதான் அதுவே நம்மேல் தெறித்து விழுந்து கொண்டே வருகிறதே!' என்றார்பாகவதர்சிரித்துக்கொண்டே