பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 சாப்பிட்டு முடிந்ததும் ஒப்பனை செய்து கொண்டு ஒருவர் பின் ஒருவராக மேடைக்கு வந்ததுதான் தாமதம், அதுவரை காத்திருந்த சிரமத்தைக்கூட மறந்து மக்கள் அவர்களை ஆரவாரத்தோடு வரவேற்றார்கள். கோழி கூவிற்று. நாடகம் முடிந்ததா? -இல்லை. கிழக்கு வெளுத்தது. நாடகம் முடிந்ததா?-இல்லை. பின் எப்போது முடிந்தது? காலை ஏழு மணிக்கு முடிந்தது! பாகவதர் தம் பரிவாரங்களுடன் புறப்பட்டார். அக்கரையிலுள்ள காரை அடையவேண்டுமானால் மறு படியும் ஆற்றைக் கடக்கவேண்டும். இருப்பதோ ஒரேஒரு மொட்டை மாட்டுவண்டி; அது பெண்களுக்கும் வயதான வர்களுக்கும் தான் சரியாயிருக்கும். ராமநாதன் மீண்டும் தம்முடன் இந்தச் சகதியில் நடக்கத் தயாராயிருப்பாரா?... பாகவதர் யோசித்தார்; அவருக்கு ஒரு யுக்தி தோன் றிற்று. "ஒய், ராமநாதன் உமக்கும் எனக்கும் பந்தயம்' என்றார். 'என்ன பந்தயம்?' என்றார் ராமநாதன். 'இருவரும் இந்தச் சகதியில் ஒடி ஆற்றைக் கடக்கவேண்டும். நீர் முதலில் கடந்தால் உமக்கு நான் நூறு ரூபாய் கொடுத்துவிடுகிறேன்; நான் முதலில் கடந்தால் நீர் எனக்கு நூறு ரூபாய் கொடுத்துவிடவேண்டும்; என்ன சொல்கிறீர்?" என்றார் பாகவதர். அவ்வளவுதான்; ராமநாதனுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. 'உங்களைவிட நான் தடித்திருக் கிறேன் என்று பார்க்கிறீர்களா?' என்றார். 'இல்லாவிட்டால் என்னை நீர் ஜெயித்து விடுவீரா? எங்கே, ஜெயித்துவிடும் பார்ப்போம்?' என்று பாகவதர் வேட்டியை வரிந்துகட்டினார்.