பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 'சரி, பார்ப்போமா?’ என்று ராமநாதனும் தம்முடைய வேட்டியை வரிந்து கட்டினார். ஒன், டு, த்ரீ... இருவரும் எடுத்தார்கள் ஒட்டம்! ஆனால் ஜெயித்தது யார் என்கிறீர்கள்? ராமநாதன்தான்? 'உலகத்தைச் சுற்றி ஓடிவரும் போட்டியில் தொந்திக்கணபதி முருகனை ஜெயித்ததுபோல நீர் என்னை ஜெயித்துவிட்டீரே, ஐயா!'என்றார் பாகவதர். ராமநாதனின் தொந்தியைத் தடவிவிட்டுக்கொண்டே. 'அந்தத் தொந்திக்கணபதி ஓடாமலே ஜெயித்தார்; இந்தத் தொந்திக் கணபதி ஒடியல்லவா ஜெயித்திருக்கிறார்? எடுங்கள், நூறு ரூபாயை?’ என்று கறாராகக் கையை நீட்டினார் ராமநாதன். அவர் நீட்டிய கையில் நூறு ரூபாய்க்கு இருநூறு ரூபாயாக எடுத்து வைத்தார் பாகவதர். அந்த இருநூறு ரூபாயையும் பாகவதரின் பாக்கெட்"டில் திரும்பப் போட்டுவிட்டு, 'உங்களை நான் பாட்டில் ஜெயிக்கா விட்டாலும் ஒட்டத்திலாவது ஜெயித்தேனே, அந்தப் பெருமையே எனக்குப்போதும்' என்றார் ராமநாதன். எப்படி நண்பர்கள்? பவளக்கொடி மீதிலாசை... சினிமா எப்படியோ பிறந்து, எப்படியோ வளர்ந்து விட்ட அது, இன்று எத்தனை பேரைப் பிடித்து எப்படி எப்படியெல்லாம் ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறது! அந்த உலகில் எந்தப் பாடுபட்டாவது நுழைந்து விடவேண்டும் என்பதற்காகச் செய்யும் வேலையைக் கூட விட்டுவிட்டு, சினிமா ஸ்டுடியோக்களைச் சுற்றிச் சுற்றிவந்து கொண்டிருப்போர் எத்தனைபேர்!