பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 அதற்காக சலூன்காரர்களின் உயிரை 'உண்டு, இல்லை என்று வாங்கி அவர்கள் செய்து கொள்ளும் சிகையலங்காரங்கள்... வைத்துக் கொள்ளும் அரும்பு வகை மீசைகள்... பார்க்கும் பார்வை, சிரிக்கும் சிரிப்பு, நடக்கும் நடை. . . ஆஹா, அவையனைத்தும் பார்ப்பவர்களின் அனுதா பத்தைப் பெறக் கூடியவையாயிருந்தாலும், அவற்றுக்காக அவர்கள் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் அசட்டுத்தனம்... பிறர் விரும்பாவிட்டாலும் தங்களுடைய சொந்தச் செலவிலேயே அவர்கள் போடும் வேஷங்கள், செய்து கொள்ளும் விளம்பரங்கள், நடத்திவரும் நாடகங்கள்... அவற்றைப் பார்ப்பதற்கு அவர்கள் பணம் கொடுத்து ஆள் பிடிக்க வேண்டியிருந்தால் அதில் அவர்களுக்குள்ள பரவசம்... ‘பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலிருந்து தப்பி வந்து விட்டவர்களோ இவர்கள்!” என்றுகூட அல்லவா நம்மை நினைக்க வைத்துவிடுகிறார்கள் அவர்கள் இந்த மாதிரி அவஸ்தைகள் எதுவும் இல்லாமலே திரை உலகில் நுழைந்த பெருமை பாகவதருக்கு உண்டு. ஆம், ஏற்கனவே அறிவித்திருந்ததுபோல், சங்கீத உலகத்தைக்கூட அவர் தேடிக்கொண்டு போகவில்லை; அது தானாகவே அவரைத்தேடிக்கொண்டு வந்தது. நாடக உலகத்தைக்கூட அவர் தேடிக்கொண்டு போகவில்லை; அது தானாகவே அவரைத் தேடிக்கொண்டு வந்தது. சினிமா உலகத்தைக்கூட அவர் தேடிக் கொண்டு போகவில்லை; அதுவும் தானாகவே அவரைத் தேடிக்கொண்டு வந்து விட்டது. சென்னை சால்ட் க்வார்ட்டர்ஸ்-க்கு எதிர்த்தாற் போல் இருந்த 'ராயல்தியேட்டரை நம்மில் பலர் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். அந்தத் தியேட்டரில்தான் ஒருநாள்