பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 டைரக்டர் சொல்ல, உதவி டைரக்டர் டப்' என்று "க்ளாப்'அடிப்பார். அவ்வளவுதான்; வெளியே மறுபடியும் 'பாம், பாம்பபாம், பாம், பாம்ப பாம்!' என்று "பல்ப்ஹாரன்' அலற ஆரம்பிக்கும். டைரக்டர் என்ன செய்வார் பாவம், 'சிவனே!" என்று உட்கார்ந்துவிடுவார். இப்படி ஒருமுறை அல்ல; இரண்டு முறை அல்ல; நாலைந்து முறைகள் தொடர்ந்து நடந்துவந்தது. பார்த்தார் பாகவதர்; பணத்துக்காக நண்பர்கள் இருவரும் இப்படிப் பகை வளர்ப்பதை அவர் விரும்ப வில்லை. கூட்டாளியைக் கூப்பிட்டார்; அவருடைய கணக்கைத் தாமே தீர்த்து அனுப்பிவைத்தார். இதை அறிந்த ஏ.எல்.ஆர்.எம்.கண்ணில் நீர் துளிர்க்கச் சொன்னார். 'படாதிபதிகளின் காலை வாரி விடும் நடிகர்களைத் தான் இதுவரை நான் பார்த்திருக்கிறேன். கைகொடுக்கும் ஒரு நடிகரை இப்போது தான் என் வாழ்நாளிலேயே முதன் முதலாகப் பார்க்கிறேன்!" காணக் கண் கோடி வேண்டும்... சினிமா உலகில் சேர்ந்த பிறகு பாகவதரின் பெயரும் புகழும் எப்படிப் பல்கிப் பெருகி வளர்ந்தன என்பதை நான் ஒருவர் சொல்வதைக்காட்டிலும் அவருடைய ரசிகர்களில் ஒருவர், சக நடிகர்களில் ஒருவர், டைரக்டர்களில் ஒருவர் சொல்வது இன்னும் சிறப்பாக இருக்குமென்று நினைக்கிறேன். இதோ, முதலில் அவருடைய ரசிகர்களில் ஒருவ ரான 'கோலார் மாப்பிள்ளை சொல்வதைக் கேளுங்கள்: