பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 காலம், அந்த நிலையில் ஒரு நாள் அவனைப் பார்த்துவிட்ட அடுத்த வீட்டுக்காரர் அவனுடைய அப்பாவிடம் போய் விஷயத்தைச் சொல்லி விட்டார். அவ்வளவு தான்; அப்பா ஆற்றை நோக்கி விடுவிடு என்று விரைந்தார். அதற்குள் வேறொரு நண்பன் மூலம் விஷயத்தைத் தெரிந்து கொண்டு விட்ட தியாகராஜன் சட்டென்று ஆற்றைவிட்டுக் கரையேறி, மணலில் விழுந்து உருண்டு புரண்டு எழுந்து நின்றான். அப்பா வந்தார்; ஏண்டா மீண்டும் நீந்த ஆரம்பித்து விட்டாயா?" என்றார். 'நான் எங்கே அப்பா, நீந்தினேன்? நானும் இவனும் இங்கே சடுகுடு அல்லவா விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்று பையன் சமாளித்தான். 'அடுத்த வீட்டுக்காரர் சொன்னது பொய்யா என்றார் அப்பா; அவர் யாரைப் பார்த்தாரோ என்னவோ?’ என்றான் பையன். 'சரி சரி, வா என்று அவனை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்து குளிக்கச் சொன்னார் அப்பா. திருச்சி பாலக்கரையில் 'பழைய கோயில் என வழங்கும் ஜபமாலை மாதா கோயிலில் அப்போதிருந்த பள்ளிக் கூடமே தியாகராஜன் படித்த பள்ளிக்கூடம். வாத்தியார் பெயர் திரு. அப்பாத்துரை. ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவது அவருக்குத் தொண்டாயிருந்தது; தியாகராஜ னுக்கோ அது தொல்லையாயிருந்தது. காரணம் வேறொன்று மில்லை; திருப்புகழும், தேவாரமும் அந்தக் குழந்தையின் உள்ளத்தை அவ்வளவு தூரம் கவர்ந்திருந்ததுதான். நகைகளுக்கு நகாசு வேலை செய்யும் தொழில் தகப்பனாருக்கு. அந்தத் தொழிலைத் தம்முடன் சேர்ந்து தம் மகனும் செய்ய வேண்டுமென்று அவர் விரும்பினார். அவருடைய விருப்பத்தைத் தம்பி தியாகராஜனும் தன்னால் முடிந்த வரை நிறைவேற்றி வைக்கத்தான் முயன்றான். ஆனால் அதற்காக அவன் சுத்தியலை எடுத்துப் பனையின் மேல் தட்டியபோது, அவன் கையாண்ட நகைகளில் நகாசு