பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கண்டது அந்த ஒரு நிகழ்ச்சியில்தான்; அதற்குப் பின் காணவேயில்லை. அது மட்டுமா? ஜோலார்ப் பேட்டை ஜங்ஷனில் ஒரு நாள், இரவு மணி பதினொன்று. சேலம் வண்டிக்காகக் காத்திருந்து அலுத்துப்போன நான் காலாற நடந்து பிளாட்பாரத்தின் கோடிக்குச் சென்றேன். சற்று இருள் சூழ்ந்த இடம். அங்கிருந்த புங்க மரத்தின் கீழ் சிலர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். ஓர் இனிமையான குரல்; பேசுவதும் பாடுவது போலவே இனிமையாக இருந்தது. அந்தக் குரலுக்கு உரியவர் பாகவதர்தான், நண்பர்கள் புடைசூழ அவர் ஏதோ ஒரு விவாதத்தைச் சூடாக நடத்திக் கொண்டிருந்தார். நான் வணக்கம் என்றேன்; 'கோலார் மாப்பிள்ளையா? வாங்க, வாங்க! என்றார். பாகவதர் வந்திருப்பதை அதற்குள் மோப்பம் பிடித்து விட்ட பிரயாணிகள் ஒடோடியும் வந்து எங்களைச் சுற்றி முற்றுகையிட்டுவிட்டனர். அவர்களில் ஓர் இளைஞர், எழுதப் படிக்கத் தெரியாதவர், பாகவதரை நெருங்கி, அந்தத் தடியன் பி.வி.(பி.யு) சின்னப்பா பிக்சர் எங்களுக்குப் பிடிக்கிறதேயில்லை. அவனை ஏன் ஸார், சினிமாவிலே நடிக்க விடறாங்க?' என்று ஏதேதோ தாறுமாறாகப் பேசினார். பாகவதர் சிரித்தார்; சிரித்துவிட்டுச் சொன்னார்: நீங்க இன்னும் அந்த நடிகரின் பெயரையே சரியாகத் தெரிஞ்சுக்கலையே? படத்தின் தரம் உங்களுக்கு எப்படிப் புரியப்போவுது? பி. யு. சின்னப்பா என் அருமை நண்பர்; அவரைத் தூவிப்பது நீங்கள் எனக்குச் செய்யும் அவமானம்' என்றார் பாகவதர். இளைஞர் வெட்கித் தலை குனிந்தார். கூடி நின்ற அனைவரும் பாகவதரின் பெருந்தன்மையை வெகுவாகப் போற்றினர்.