பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 இவை ரசிகர் கண்ட காட்சிகள்; அடுத்தாற்போல சகநடிகர்களில் ஒருவரான திரு எம்.ஜி.ஆர்.கண்டகாட்சியை இதோ அவரே விவரிப்பதைப் பாருங்கள்: 'பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் திருமதி டி.ஆர். இராசகுமாரி அம்மையார் அவர்களின் ‘புதுமனை புகுவிழா'அன்று சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. திரு சி.எஸ்.ஜெயராமன் பாடிக் கொண்டி ருந்தார். மக்கள் வெள்ளம்போல் திரண்டிருந்தார்கள். 'கார்த்திகை விளக்கு வைப்பதுபோல் சுற்றிலும் மின்சார விளக்குகள் போடப்பட்டிருந்தன. மூலை முடுக்கிலுள்ளவர் களின் முகங்களும் நன்கு தெரியுமாறு அவை அமைக்கப்பட்டி ருந்தன. மேடைக்கருகில் நானும் உட்கார்ந்திருந்தேன். என்னை மற்றவர்கள் கவனிக்கும் அளவுக்கு நான் அப்போது விளம்பரம் பெற்றிருக்கவில்லை. ஆனால் மற்றவர்களின் செயலை, ஆற்றலைக் கவனித்துச் சிந்திக்கும் அளவுக்கு நான் மனப்பாங்கு பெற்றிருந்தேன். சி.எஸ்.ஜெயராமன் நன்றாகப் பாடிக் கொண்டிருந் தார். மக்களும் வெகுவாக ரசித்து, அவ்வப்போது கைதட்டித் தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரெனக் கூட்டத்தினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. 'என்ன குழப்பம்?' என்று நான் திரும்பிப் பார்த்தேன்; கை தட்டல்கள் ஒலித்தன. ஆமாம், பாகவதர் அவர்கள் கூட்டத்தின் ஒருபுறத்தில் வந்து கொண்டிருந்தார்கள் அவரைச்சுற்றி ஏதோ ஒர் ஒளி வீசிக் கொண்டிருந்த தாக நான் அப்போது உணர்ந்தேன். மேடைக்கு அருகில் அவருக்கென நாற்காலி போடப்பட்டிருந்தது. சி. எஸ்.ஜெ. தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தார். பாகவதர் அவர்கள் எங்கெங்கு தலை ஆட்டினார் களோ, ரசித்தார்களோ அங்கங்கே மக்களும் தலையாட்டி எம்.கே.டி.9