பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 அவருடைய இல்லத்திற்குத்தான் பாகவதர் எதிர்பாராத விதமாக வருகை புரிந்திருந்தார். அவர் வந்திருக்கும் செய்தியை அறிந்ததும் வெள்ளம்போல் மக்கள் திரண்டு விட்டனர். பாகவதர் அந்தச் செல்வந்தருக்காகச் சில சினிமாப் பாடல்களைப் பாடினார். கேட்டுக் கிறுகிறுத்தது கூட்டம். தேனில் வண்டென எல்லோரும் மயங்கினார்கள். நெஞ்சை அள்ளும் காந்த சக்தி பெற்றிருந்த அந்த அபூர்வ முகத் தோற்றம் பார்த்தோர் கண்களை அப்படியே நிலைக்க வைத்தது. தமக்கு இசை விருந்து அளித்த பாகவதருக்கு 'ஊர்க்கவுண்டர் ஆயிரம் ரூபாய்களை ஒரு தட்டில் வைத்து அவரிடம் கொடுக்க வந்தார். பாகவதர் அதை ஏற்றுக் கொள்ளாமல், இங்கே நான் பணத்திற்காகப் பாட வரவில்லை. இன்று நான் லட்சக் கணக்கில் பணம் சம்பாதிப்பதற்கு அடிப்படையாக, ஆதியில் ஒரு நாள் தாங்கள் என்னிடம் கருணை காட்டிtைர்கள். அது என் எண்ணத்தைவிட்டு எப்பொழுதும் மறைந்ததேயில்லை. இளம் சிறுவனாக, வறுமையின் வளர்ப்புப் பிள்ளையாக, என் தந்தையுடன் உங்கள் மாளிகையின் வாயிலுக்கு நான் ஒரு நாள் வந்தேன்; 'என் பாட்டைக் கேளுங்கள் என்றேன். ஆகட்டும், பாடு குழந்தாய்' என்றீர்கள். பாடினேன்; கேட்டீர்கள். என்னைப் பாராட்டவும் செய்தீர்கள். சட்டென்று பத்து ரூபாயை எடுத்து, இதை வைத்துக் கொள் என்று என்கையில் கொடுத்து, என்னை ஆசீர்வதித் தீர்கள். அன்று நீங்கள் கொடுத்த அந்தப் பத்துரூபாய் இன்று பல்லாயிரக்கணக்கில் சம்பாதிக்கும் தகுதியைப் பெற எனக்கு அடிப்படையாக அமைந்துவிட்டது. அதற்காக என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளவே இன்று நான் இங்கே வந்தேன்; பாட்டும் பாடினேன்; வருகிறேன் என்று விடை பெற்றார். கூடியிருந்தவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.