பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 சொல்லு, பாப்பா - 'ஒரு படம் வெற்றிகரமான படமா, இல்லையா?" என்பதைத் தீர்மானிப்பது இப்போதெல்லாம் அடிக்கடி மாறிக்கொண்டே வருவதை நீங்கள் அறிவீர்கள். முதலில் நூறு வாரங்கள் ஒடிய படத்தை வெற்றிப்படம்!" என்றார்கள்; பிறகு நூறு நாட்கள் ஓடிய படத்தை வெற்றிப்படம் என்று சொல்லி விடுகிறார்கள். என்ன முன்னேற்றம், என்ன முன்னேற்றம்! இந்த 'முன்னேற்றத்துக்குக் கூடத் தங்களையோ, தங்கள் நடிப்பையோ சம்பந்தப்பட்ட நடிகர்கள் நம்புவ தில்லை; தாங்கள் சார்ந்துள்ள ஏதாவது ஒர அரசியல் கட்சியையே பெரிதும் நம்புகிறார்கள். என்ன தன்னம்பிக்கை, என்ன தன்னம்பிக்கை! நல்ல வேளையாகக் கலையுலகத்துக்கு இந்த மாதிரிப் பெருமை எதையும் தேடி வைத்த புண்ணியம் பாகவதரைச் சேரவில்லை; அவர் தம்மையும் தம்முடைய நடிப்பையும் மட்டுமே நம்பி நடித்த முதல் படமான பவளக் கொடி நூறு காட்சிகள் அல்ல; நூறு நாட்கள் அல்ல; நூறு வாரங்கள், ஒடிற்று. நகரங்களில் மட்டுமல்ல; சிற்றுரர்களிலும் குக் கிராமங்களிலும் கூட ஒடிற்று. இத்தனைக்கும் அவர் பெயரால் எந்த ஊரிலும் சங்கமும் கிடையாது; மன்றமும் கிடையாது. கூலிக்கு ஆள் பிடித்து மற்ற நடிகர்கள் நடித்த படங்கள் சம்பந்தப்பட்டபோஸ்டர்களில் அவர் சாணியும் அடிக்கச் சொல்லவில்லை; வெற்றிலைப்பாக்குப் போட்டுத் துப்பவும் வைக்கவில்லை. 'காலரி மாஸ்டர்களுக்கு முன் கூட்டியே 'டிக்கெட்' வாங்கிக்கொடுத்து, தம்முடைய தலையைப் படத்தில்