பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 கண்ட போதெல்லாம் அவர் கை தட்டச் சொன்னாரா என்றால் அதுவும் கிடையாது; 'விசில்'அடிக்கச் சொன்னாரா என்றால் அதுவும் கிடையாது. இப்படி ஒரு முன்னேற்பாடும் இல்லாமலே ஒரு படம் நூறு வாரங்கள்-அதாவது, எழுநூறு நாட்கள், இரண்டாயிரத்து நூறு காட்சிகள் ஓட வேண்டுமென்றால் அந்தப் படம் மக்களை எந்த அளவுக்குக் கவர்ந்திருக்க வேண்டும்? அது மட்டுமா? இப்போது வரும் படங்களில் மிஞ்சிப்போனால் பத்துப்பன்னிரண்டு பாடல்கள்; இல்லையென்றால் ஏழெட்டோடு சரி. அவற்றையே முழுவதும் கேட்பதற்கு இந்த நாளில் ஆள் இல்லை. ஓரிரண்டு பாடல்களைக் கேட்டதுமே ரசிகர்களில் பலர் எழுந்து கூல் டிரிங்க் குடிக்க வெளியே போய் விடுகிறார்கள்; சிகரெட் பிடிக்கப் போய்விடுகி றார்கள். தன் மனைவி மக்களுடனோ, நண்பர்களுடனோ வராதவர்கள் நேரே வீட்டுக்கோ அல்லது "பீச்'சுக்கோ கூடப் போய்விடுகிறார்கள். பாகவதர் நடித்த பவளக்கொடி படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் என்கிறீர்கள்? - ஐம்பத்தைந்து பாடல்கள். அவற்றில் பல பாகவதரால் பாடப்பட்டவை தான். ஆயினும் அவற்றைக் கேட்கும்போது எந்த ரசிகராவது 'கூல் டிரிங்க் குடிக்க வெளியே போனாரா? சிகரெட் பிடிக்க வெளியே போனாரா? இல்லை; இல்லவே இல்லை. இத்தகைய காந்தர்வ கானரத்னம் கச்சேரி செய்யும் போது என்ன நினைத்தார் ரசிகர்கள் 'சினிமாப் பாட்டுப் பாடுங்கள்' என்றால், 'கர்நாடக சங்கீதத்தில் கரை கண்டவன் நான்; என்னையா சினிமாப் பாட்டுப் பாடச்