பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 பிறக்கவில்லை; திருப்புகழ் சப்தமும், தேவாரப் பண்ணுமே பிறந்தன தியாகராஜன் என்ன செய்வான், பாவம் அந்தச் சந்தத்துக்கும் பண்ணுக்கும் ஏற்பத் தன்னை மறந்து பாட ஆரம்பித்துவிடுவான். அவ்வளவு தான் தெருவோடு போய்க் கொண்டிருக்கும் மக்கள் தங்களை மறந்து விடுவார்கள்; தங்களுடைய வேலைகளை மறந்து விடுவார்கள்; தியாக ராஜனைச் சுற்றி நின்று அவனுடைய அமுதகானத்தை அப்படியே பருகி ஆனந்தத்தில் திளைக்க ஆரம்பித்து விடுவார்கள்! தகப்பனார் வருவார்; என்னடா இது ஏன் இப்படிக் கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டாய் என்பார். நானா சேர்த்தேன்? அதெல்லாம் ஒன்று மில்லை, அப்பா நான் பாட்டுக்கு வேலை செய்து கொண்டே பாடிக் கொண்டிருந் தேன்; இவர்கள் தாங்களாகவே வந்து அதைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பான் தனயன். 'நீ பாடாமல் வேலை செய்திருந்தால் இங்கே கூட்டம் சேராமல் இருந்திருக்குமோ, இல்லையோ என்பார் கிருஷ்ணமூர்த்தி; இங்கே கூட்டம் சேராமல் இருந்திருந்தால் நானும் மேலே பாடாமல் வேலை செய்திருப்பேனோ இல்லையோ என்பான் தியாகராஜன் தகப்பனார் சிரித்து விடுவார். இதே மாதிரி தன் தாயையும் தம்பி தியாகராஜன் சிரிக்க வைக்க முயன்றதுண்டு. ஆனால் . . ஒரு நாள் விளக்கு வைக்கும் நேரம்; தன் அருமை மகனை மண்ணெண்ணெய் வாங்கிக் கொண்டு வருமாறு பணித்தார் தாயார் மாணிக்கத்தம்மாள். 'சரி என்று பையன் அம்மா கொடுத்த காசையும், புட்டியையும் வாங்கிக் கொண்டு கடைக்குச் சென்றான். எதிர்த்தாற் போல் அரிசி முறுக்கு விற்றுக்கொண்டு வந்தான் ஒருவன். பையனுக்கு முறுக்கைக் கண்டதும் வாயை நமைத்தது; கையிலிருந்த